திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ ஆடியோ லான்ச் எங்கே, எப்போது தெரியுமா?. அதிரடியாக வந்த அப்டேட்

Leo Audio Lanuch: ரஜினியின் ஜெயிலர் அலை ஓய்ந்த நிலையில் இப்போது லியோ படத்தின் எதிர்பார்ப்பு தான் உச்சத்தில் உள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் லியோ. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் ஏகப்பட்ட திரைபிரபலங்களும் சங்கமித்து உள்ளனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர்களான மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர்களை தொடர்ந்து அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் அர்ஜுனின் அறிமுக வீடியோ வெளியாகி ஹைப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

Also Read : லியோ-வில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள கில்மா நடிகை.. வான்டடா தளபதிக்கு கொடுத்த முத்தம்

மேலும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக படக்குழுவும் முயற்சி செய்த நிலையில் செப்டம்பர் மாதம் முழுவதுமே எல்லா ஆடிட்டோரியம் புக்காகியுள்ளதாம். ஆகையால் வேறு வழியில்லாமல் இப்போது சென்னையில் லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

அதுவும் எப்போதுமே பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் நடக்கும் இடமான நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் இதற்கான ஏற்பாடுகள் நடக்க இருக்கிறதாம். மேலும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை கணக்கிட்டு வெளியாக இருக்கிறது. எனவே செப்டம்பர் 30ஆம் தேதி லியோ ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறது.

Also Read : சியர்ஸ் கேளாக லியோ டாட்டூவுடன் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 40 வயசுலையும் என்ன பொண்ணுடா!

விஜய் பொருத்தவரையில் தன்னுடைய படத்தின் ஆடியோ லான்ச்சில் நிறைய விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் சமீப காலமாக விஜய்யை சுற்றி நிறைய சர்ச்சையான விஷயங்கள் நடந்து வரும் நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்வார் என்று தெரிகிறது.

இதில் சூப்பர் ஸ்டார் பட்டம், ஜெயிலர் வசூல், அரசியல் நகர்வு ஆகியவற்றை கண்டிப்பாக விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சி நடக்க இன்னும் ஒரு மாத கால அவகாசம் மட்டுமே உள்ளதால் இப்போது படக்குழு அதற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Also Read : ரசிகர்களுக்கு தளபதி விஜய் வைத்த செக்.. புஸ்ஸி ஆனந்த் மூலம் போடப்பட்டிருக்கும் 5 முக்கிய கட்டுப்பாடுகள்

Trending News