திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

கடந்த வாரம் ரிலீசான 7 படங்களில் அதிகமா கல்லா கட்டியது யார் தெரியுமா.? கம்மி பட்ஜெட் பெத்த லாபம்

கடந்த வாரம் செப்டம்பர் 20 ஆம் தேதி தியேட்டர்களில், சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லத்துறை’, ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘கடைசி உலகப் போர்’, தமிழரசன் பச்சமுத்துவின் ‘லப்பர் பந்து’, சச்சி இயக்கத்தில் சட்டம் என் கையில், பிரசாத் முருகனின் ‘ஒன்ஸ் அபான் என் டைம் இன் மெட்ராஸ்’ உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸாகின.

பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் இல்லையென்றாலும் சிறு பட்ஜெட் படங்களுக்கிடையே ரிலீசின் போது போட்டி என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் அட்டகத்தி தினேஷ், ஹரிஸ் கல்யாண் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள லப்பர் பந்து படத்தைப் பற்றி பார்ப்போம்!

லப்பர் பந்து: தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கிய இப்படத்தில், அட்டகத்தி தினேஷ், தேவதர்ஷினி சேத்தன், ஜென்சன் திவாகர், ஹரீஸ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். விளையாட்டை மையப்படுத்திய படங்களுக்கு எப்போதும் மவுஸும் கிரேசும் ஜாஸ்தி எனவே இப்படத்திற்கும் அது இருந்தது.

கடலூர் மாவட்டத்தைச் சுற்றி நடக்கும் கதையிது.பூமாலை என்ற கேரக்டரில் நடித்துள்ள தினேஷ், கிரிக்கெட் ஆட்டக்காரர். இவர் ஹீரோயினுக்கு அப்பாவாகவும், விஜயகாந்த் ரசிகராகவும் நடித்துள்ளார்.இதே ஊரில் பவுலராக உள்ள அன்பு ( ஹரீஸ் கல்யாண்). இவர் ஒடுக்கப்பட்ட இளைஞர் என்பதால் இவரை அணியில் சேர்க்க மறுக்கப்பட்ட நிலையில், தன்னை சேர்க்கும் அணியில் இருந்து விளையாடுகிறார்.

பேட்ஸ்மேனாக திகழும் பூமாலைக்கும் அன்புவுக்கும் இடையிலான ஈகோ தலைதூக்க; பூமாலையில் மகள் துர்காவுக்கும் அன்புவுக்கும் இடையிலான காதல்… கிராமத்து கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை! இதில், நகைசுவை, உணர்வு, கிராம வாழ்வியல், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி இவையெல்லாம் உள்ளன.

சாமானிய மக்களின் வாழ்வியல் நகர்தலை விளையாட்டின் மூலம் இப்படம் கூறியதாகப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம்  வெளியான முதல் நாளில் ரூ.70 லட்சம் வசூலித்த நிலையில், 2 வது நாளில் ரூ.1.4 கோடி என வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2  நாட்களில் மட்டும் ரூ.2.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் இது மேலும் வரும் நாட்களில் அதிகரிக்கும் என தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News