வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நான் யாருன்னு தெரியுதா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன மாஸ் ஹீரோ

சினிமாவில் உள்ள ஹீரோக்கள் தங்களது உடம்பை எப்போதுமே இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை பின்பற்றி வருவார்கள். இந்நிலையில் படத்திற்காக சில நடிகர்கள் தங்களது உடம்பை ஏற்றவும் செய்கிறார்கள்.

அப்படி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாஸ் ஹீரோ ஒருவர் உடம்பை ஏற்றியுள்ளார். பின்னால் இருந்து சிகரத்தை பார்க்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்தால் அந்த நடிகரா இவர் என்று யாராலும் அடையாளம் காண முடியாது.

Also Read : தமிழ் டாப் ஹீரோக்கள் இவங்கள்ட்ட கத்துக்கணும்.. கம்மி பட்ஜெட், தரமான படங்களை கொடுத்த 5 சூப்பர் ஸ்டார்ஸ்

அதாவது மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமார் தான் தற்போது உடல் எடையை கூட்டி உள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ஹிட் படங்களை கொடுத்து வரும் பிருத்விராஜ் பாலிவுட் படமான படே மயா சோட்டா மியானின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்திருந்தார்.

இந்த படம் விரைவில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது அதுமட்டுமின்றி பாகுபலி பிரபலம் பிரபாஸ் உடன் இணைந்து சலார் படத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு பிருத்விராஜின் கடுவா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு பிருத்விராஜின் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வரும் நிலையில் கடுவா படம் தமிழில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

Also Read : மொத்தமாக காலியாகும் பாலிவுட் இண்டஸ்ட்ரி.. வெளியான 26 படங்களில் இந்த ஒரு படம் மட்டுமே வெற்றி

இப்படம் வருகின்ற மார்ச் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி மூலம் உடம்பை இரும்பு போல் மாற்றி உள்ளார். இது பிருத்விராஜ் என்றால் ரசிகர்களே நம்புவார்களா என்பது சந்தேகம் தான்.

அந்த அளவுக்கு வொர்க் அவுட் மூலம் உடம்பை பல மடங்கு கூட்டி உள்ளார். மேலும் எந்த படத்திற்காக இவர் இவ்வாறு மாறி உள்ளார் என்ற அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. பிருத்விராஜின் இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலம் அவருக்கு நிறைய படங்களில் வில்லன் வாய்ப்பு கிடைக்கும் என்று பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி மீண்டும் இவரை தமிழ் படங்களில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read : அடுத்த லூசிஃபர் ரஜினிதான்.. கதை ரெடியாக வைத்து காத்திருக்கும் பிரபலம்

Trending News