புதன்கிழமை, ஜனவரி 15, 2025

செட்டே ஆகாத கேரக்டரை தேர்வு செய்த வெற்றிமாறன்.. விஜய்சேதுபதிக்கு முன் விடுதலை பட வாத்தியார் யார் தெரியுமா?

நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான விடுதலை பாகம்1 திரைப்படம் 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதனிடையே விடுதலை திரைப்படத்தின் வசூலும் பல கோடிகளை அள்ளியுள்ளது. மேலும் சூரிக்கு இப்படத்தை தொடர்ந்து அடுத்தபடியாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது.

இப்படி நடிகர் சூரி இப்படத்திற்காக எப்படியெல்லாம் கடின உழைப்பை கொடுத்தாரோ, அதற்கு நிகராக விஜய் சேதுபதியும் தனது நடிப்பை இப்படத்தில் நிருபித்தார் என்று சொல்லலாம். பெருமாள் என்கிற வாத்தியார் கதாபாத்திரத்தில் விஐய் சேதுபதி நடித்த இக்கதாபாத்திரம் அவரது கேரியரில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் விடுதலை பாகம் 2 முழுவதும் விஜய் சேதுபதி தான் ஹீரோ போல வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: லியோ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. லோகேஷின் மாஸ்டர் பிளான்

இதனிடையே முதன்முதலில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குநர் மற்றும் நடிகரை தான் வெற்றிமாறன் தேர்வு செய்துள்ளார். அந்த நடிகரும் சில நாட்கள் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் ஒரு கதாபாத்திரத்தை தத்ரூபமாக கொண்டுவர பல முயற்சிகளை மேற்கொள்வார்.

அந்த வகையில் விடுதலை திரைப்படத்தை நான்கு வருடங்களாக வெற்றிமாறன் பார்த்து பார்த்து செதுக்கினார். அதுவும் மூன்று முறை படத்தின் பாதி வரை எடுத்துவிட்டு, படம் தான் எதிர்பார்த்தது போல் வரவில்லை என வெற்றிமாறன் மீண்டும் கால்ஷீட் போட்டு எடுத்துள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மண் மனம் மாறாத கிராமத்து கதைகளை மையமாக வைத்து, பல ஹிட் படங்களை இயக்கிய பாரதிராஜா தான் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் தேர்வானவர்.

Also Read: விடுதலை பட வெற்றிக்கு பின் வெற்றிமாறன் தொடங்கும் 3 படங்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

ஆரம்பத்தில் காடு, மலை என இவரை வைத்து வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். ஆனால் பாரதிராஜாவுக்கு காட்டில் ஏற்பட்ட குளிரால் அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் போயுள்ளது. இதனால் இப்படத்திலிருந்து தானாகாவே அவர் விலகியுள்ளார். அதன் பின்பு தான் வெற்றிமாறன் விஜய் சேதுபதியை அணுகி, வாத்தியார் கதாபாத்திரத்தை கச்சிதமாக எடுத்துள்ளார்.

ஏற்கனவே பாரதிராஜா நடித்த அத்தனை கதாபாத்திரத்தையும் நீக்கிவிட்டு, விஜய் சேதுபதியை வைத்து இப்படத்தை புதிதாக கால்ஷீட் வாங்கி உருவாக்கியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி வந்த பிறகு தான் ஜெயிலில் இருந்து சம்பத் ராம் வரும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், நல்ல வேலை பாரதிராஜா இப்படத்தில் நடிக்கவில்லை என ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Also Read: 80 வயதிலும் கனவை நினைவாக்கிய பாரதிராஜா.. நடிப்பையும் தாண்டி விதை தூவிய இயக்குனர் இமயம்

Trending News