ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஜித் ரேஸிங்.. தல செலக்ட் செய்த அசத்தல் ரேஸ் கார்.. இந்த கார்ல என்னென்ன வசதி இருக்கு பாருங்க

ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்கவுள்ள அஜித்குமார் சமீபத்தில் தனது புதிய Porsche GT3 RS காரையும் தன் டீமையும் அறிமுகம் செய்தார்.

அஜித் கார் கலர் சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சல் நிறத்தில் அட்டகாசமா இருந்தது. அடுத்தாண்டு ஜனவரியில் கார் ரேஸிங் சார்பில் அஜித் அணியின் தலைவராகவும் டீமையும் வழி நடத்துகிறார். அவரது அணி 24 ஹெச் துபாய் ரேஸில் கலந்துகொள்ள உள்ளது.

அஜித்தின் புதிய ரேஸ் காரின் என்னென்ன சிறப்பம்சங்கள்?

அஜித் தேர்தெடுத்த Porsche GT3 RS அதிவேக செயல் திறனுள்ள கார். இந்தக் கார் 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் சுலபமாக எட்டிவிடும் திறனுடையது.

Porsche GT3 RS காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 296 கிமீட்டர் என்பதால் இது டிராக்கில் ஓடும் போது பறப்பது போன்ற உணர்வை தருமாம்.

இந்தக் கார் 4 லிட்டர் திறன் உள்ள எஞ்சின் ஏரோடினாமிக் டிசைன் என ஒவ்வொன்றுமே ரேசிங்கிற்காக வடிவமைத்துள்ளார்.

இத்தனை அம்சங்களுடன் கூடிய இந்தக் காரின் விலை ரூ.3.5 கோடி. இத்தனை விலை உயர்ந்த கார் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

உலக கார் ரேஸிங்கில் Porsche GT3 RS சிறந்த செயல் திறனுடையதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கார். அஜித்தும் இதே காரை தேர்வு செய்துள்ளதால் போட்டியில் கண்டிப்பாக ஜெயிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஏற்கனவே BMW Asia Championship உள்ளிட்ட ரேஸிங்கிலும் கலந்துகொண்டு தனது திறமையை அவர் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News