வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இனி லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க.. மொத்த கெத்தும் போய் வெத்தான நயன்தாரா

Actress Nayanthara open talk: 20 வருடங்களுக்கு மேல் தென்னிந்திய முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் இவருடைய 75வது படமான அன்னபூரணி என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தான் நயன்தாரா பல விஷயங்களை  ஓப்பனாக பேசி இருக்கிறார்.

‘தயவுசெய்து இனி லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லாதீங்க, அப்படி சொன்னா திட்றாங்க. அன்னபூரணி படத்தில், எல்லா விஷயத்தையும் நான் சரி பார்த்தேன். ஆனால் அந்த லேடி சூப்பர் ஸ்டார்னு போட்டது என்கிட்ட சொல்லாமலே செய்திருக்காங்க’ என்று நயன்தாரா சொன்னார். உடனே, இது ரசிகர்களின் விருப்பமாக இருக்கட்டும் என்று, சர்ப்ரைஸாக அப்படி செய்ததாக அன்னபூரணி பட இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா விளக்கம் அளித்தார்.

நயன்தாராவின் சமீபத்திய படங்கள் எதுவுமே அவருக்கு எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு இவருக்கு நேரமே சரியில்ல, கையில் எடுக்கும் படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. இப்போது அவருக்கு வருமானத்தை பெற்று தருவது பிசினஸ் மட்டும்தான்.

Also read: பல லட்சம் செலவு செய்து நயன்தாரா மாதிரி மாறிய பிரதீப்.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ!

நயன்தாராவின் ஆட்டம் அடங்கிருச்சு

இதனால் கணவருடன் சேர்ந்து ஸ்கின் ப்ராடக்ட், நாப்கின் போன்றவற்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகிறார். திருமணத்திற்கு முன்பு வாங்கிய 10 கோடி சம்பளமும் ஆட்டம் கண்டது. இப்போது வேறு வழி தெரியல, இதனால் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று இனி கூப்பிடாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அது மட்டுமில்லை முன்பு அவர் தயாரிக்கும் படங்களுக்கு மட்டுமே ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபடுவார். ஆனால் இப்போது அவர் நடிக்கிற படங்களுக்கு வாண்ட்டடாக போய் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கிறார். முன்னாடி எல்லாம் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நயன்தாரா நடித்த போது, ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட முடியாது என கெத்து காட்டுவார். ஆனால் இப்பொழுது வெத்தாகிவிட்டார்.

Also read: ஹரிஷ் கல்யாணத்துக்கு கை கொடுத்த புது ராசி.. நயன்தாராவையே ஓரங்கட்டிய செகண்ட் இன்னிங்ஸ்

Trending News