வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

3 வருடம் என் பக்கத்தில் வராதீங்க.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அசோக் செல்வன்

சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் மன்மத லீலை, ஹாஸ்டல் போன்ற திரைப்படங்கள் வெளியானது. அதிலும் இவர் நடித்து வெளிவந்த மன்மத லீலை திரைப்படம் சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.

அதைத் தொடர்ந்து இப்போது இவருக்கு ஏகப்பட்ட திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் மூன்று வருடங்களுக்கு இவரை யாரும் அணுக முடியாத அளவுக்கு கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு அவர் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

Also read:5 வருடத்திற்கு பின் கமல் தூசி தட்டும் படம்.. உற்சாகத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்த நிறுவனம்

அந்த அளவுக்கு மனுஷன் செம பிசியாக ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவருடைய மார்க்கெட் தற்போது கிடு கிடுவென உயர்ந்துள்ளதால் சம்பளத்தையும் தாறுமாறாக இவர் உயர்த்தி இருக்கிறார். அந்த வகையில் இவருடைய சம்பளம் தற்போது ஒரு கோடியாக இருக்கிறது.

இருப்பினும் இவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து இவரை புக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இவர் அசோக வனம்லோ அர்ஜுனா கல்யாணம், நித்தம் ஒரு வானம், ஆகாசம் உள்ளிட்ட எட்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read:பயங்கர பிஸியா இருக்கும் விஜய் சேதுபதி.. அடுத்து அடுத்து இருக்கும் படவாய்புகள்

இதனால் இவர் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கால் சூட் கொடுக்க மறுத்து வருகிறாராம். மேலும் இன்னும் சில வருடங்களுக்கு நான் ரொம்ப பிசி. அதனால் இப்போதைக்கு யாரும் என்னை தேடி வர வேண்டாம் என்று கூறி ஷாக் கொடுக்கிறாராம்.

இதை பார்த்த பலரும் சில நாட்கள் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர் இப்போ இவ்வளவு பிஸியா என்று வியந்து போகிறார்கள். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அசோக் செல்வனை பார்த்து இப்போது கோடம்பாக்கமே மூக்கில் விரலை வைக்கிறது.

Also read:ரகசியமாக கைலாசா சென்று வரும் மற்றொரு நடிகை.. ரஞ்சிதாவை தொடர்ந்து நித்திக்கு கிடைத்த பொக்கிஷம்

Trending News