சூட்டிங் ஆரம்பிக்குமா தெரியல? ரிலீஸ் தேதியை லாக் செய்த லைக்கா.. இருதலைக் கொள்ளி எறும்பான மகிழ்த்திருமேனி

Ajith In Vidamuyarchi: அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படம் ரிலீஸ் ஆனதை ஒட்டி இந்த வருடம் தொடக்கத்திலேயே முடிவான விடாமுயற்சி படம் இப்போது வரை ஆரம்பிக்கப்படாமல் கிணத்தில் போட்ட கல்லாக அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் இந்த வருடத்திற்குள் விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் பிறக்காது என்று ரசிகர்கள் அனைவரும் மனதை தேற்றி விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் அவ்வப்போது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் விடாமுயற்சி படத்தை பற்றிய சில அப்டேட்டுகள் மட்டும் வெளி வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி அக்டோபர் மாத தொடக்கத்தில் உறுதியாக விடாமுயற்சி படம் தொடங்கி விடும். அத்துடன் படப்பிடிப்பை வேக வேகமாக நடத்தி இறுதிக்குள் முடித்து விடலாம் என்று லைக்கா முடிவெடுத்து இருக்கிறது.

Also read: இது என்ன புது நாடா இருக்கு.? உலகம் சுற்றும் அஜித்தை ஒரே போஸ்ட்டில் அசிங்கப்படுத்திய நெட்டிசன்ஸ்

அடுத்ததாக படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் அவருக்கு பிடித்தமான பைக் ரைடில் உலகம் சுற்றும் வாலிபராக அமெரிக்கா பயணத்திற்கு செல்ல இருக்கிறார். அதன் பின்பு  படத்தில் உள்ள பேட்ச் வேலைகள் எல்லாத்தையும் ஒவ்வொன்றாக முடித்துவிட்டு அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படம் ரிலீஸ் பண்ணுவதற்கு மே மாதம் ஆகுவதால் அதிக நாட்கள் இருப்பதனால் பொறுமையாகவே ஒவ்வொரு வேலைகளையும் செய்யலாம் என்ற யோசனையில் வேற இருக்கிறார்கள். ஏற்கனவே ஆமை போல் மெதுமெதுவாகத்தான் விடாமுயற்சி படம் நகர்ந்து கொண்டு வருகிறது.

Also read: மனைவிக்கு வெளிநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்.. நாடு நாடாக சுற்றியது வீண் போகல

இதுல வேற இன்னும் பொறுமையாக என்றால் விடாமுயற்சி கெதி என்ன தான் ஆகும் என்று அஜித்தின் ரசிகர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். இவர்கள் போற போக்க பாத்தா லியோ படம் ரிலீஸ் ஆகி, தளபதி 68 படமும் முடிந்த பிறகு தான் விடாமுயற்சி படத்தையே கையில் எடுப்பார்கள் என்பது போல் தான் இருக்கிறது.

இதற்கு பேசாமல் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று அஜித் நேரடியாகவே சொல்லியிருக்கலாம், அதற்கு ஆயத்தமாக நாங்கள் எங்களை தயார் படுத்தி இருப்போம் என்று ரசிகர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள். முக்கியமாக ரசிகர்களை விட இயக்குனர் மகிழ்திருமேனி என்ன செய்வது என்று தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: அஜித்தையே அலறவிட்ட அபுதாபி கவர்மெண்ட்.. அசராமல் ஏகே செய்து காட்டிய அந்த விஷயம்