வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிப்பு அரக்கனாய் மிரட்டிக் கொண்டிருக்கும் ஏஜென்ட் அமர்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 6 படங்கள்

Actor Fahad Fazil: நடிகர் பகத் பாசில் மலையாள சினிமா உலகிலிருந்து தன்னுடைய கலை பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் இன்று தென்னிந்திய ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார். இப்படியும் நடிக்க முடியுமா என ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். இவருடைய நடிப்பில் கண்டிப்பாக இந்த ஆறு படங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்கள்.

அன்னயும் ரசூலும்: பகத் பாசில் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னயும் ரசூலும். ஒரு முஸ்லிம் இளைஞன் மற்றும் கிறிஸ்தவ பெண்ணுக்கு இடையே நடக்கும் காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த படம். ரசிகர்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதோடு வணிக ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்டு அடித்தது. மேலும் இந்த படம் தேசிய விருதையும் பெற்றது.

Also Read:மாமன்னனுக்காக விட்டுக் கொடுத்த உதயநிதி.. மொத்தமாக தட்டிச் சென்ற வடிவேலு

கும்பலாங்கி நைட்ஸ்: கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்ற திரைப்படம் கும்பலங்கி நைட்ஸ். கும்பலங்கி என பெயரிடப்பட்ட மீனவ கிராமத்தில் இருக்கும் நான்கு இளைஞர்களை சுற்றி நடக்கும் கதை இது. இந்த படத்தில் பகத் பேசிய நிறைய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகின. இந்த படத்தின் நடித்ததோடு அவரே படத்தையும் தயாரித்திருக்கிறார்.

மாலிக்: கடந்த 2021 ஆம் ஆண்டு பகத் பாசிலின் நடிப்பில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற திரைப்படம் மாலிக் . இந்த படம் தமிழில் வெளியான நாயகன் படத்தின் சாயலில் இருப்பதாக கூட விமர்சனங்கள் இருந்தன. மாலிக் படத்தில் பகத் பாசிலின் நடிப்பு பலதரப்பட்ட மக்களால் பாராட்டப்பட்டது.

பெங்களூர் டேஸ்: பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்த திரைப்படம் பெங்களூரு டேஸ். தன்னுடைய உறவினர்களுடன் ரொம்பவும் சந்தோசமாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் பகத் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையால் ரொம்பவும் இறுக்கமாக வாழ்கிறார். பின்னர் தான் திருமணம் செய்த பெண்ணுக்காக மாறுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.

Also Read:Maamannan Movie Review- வடிவேலு என்னும் நடிகனை அடையாளப்படுத்திய மாரி செல்வராஜ்.. மாமன்னன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

ஜோஜி: பணக்கார அப்பாவின் மூன்று மகன்களும் தங்களுடைய நடுத்தர வயதை கடந்த பின்னும் அப்பாவுக்கு பயந்து வாழ்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் கடைசி மகன் ஜோஜி குதிரை பந்தயத்தில் எல்லா பணத்தையும் தோற்றுப் போவதால் அதன் பின்னர் நடக்கும் விளைவுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. பகத் ஜோஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்: பகத் பாசிலின் சிறந்த நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் தான் தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும். இக்கட்டான சூழ்நிலையில் தங்க செயினை விற்க புறப்படும் தம்பதிகளுடன் பஸ்ஸில் பயணிக்கும் பகத் அந்தப் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடி விழுங்கி விட்டு, அதை இல்லவே இல்லை என்று சாதிப்பது தான் இந்த படத்தின் கதை. போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அத்தனை காட்சிகளும் பகத் நடிப்பில் ரசிக்கும் படி இருக்கும்.

Also Read:உதயநிதியின் சினிமா கேரியரிலேயே மாமன்னன் தான் அதிக வசூலாம்.. மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

Trending News