
Vikram: சித்தார்த்தின் சித்தா படத்தை இயக்கிய எல் யூ அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
வீரதீர சூரன் படம் வருகின்ற மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் படக்குழு இப்போது பிரமோஷனில் மும்மரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதில் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதாவது வீர தீர சூரன் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் தியேட்டருக்கு 10 நிமிடம் முன்கூட்டியே வரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஏனென்றால் முதல் காட்சியிலிருந்தே படத்தின் கதை தொடங்க இருக்கிறது.
வீர தீர சூரன் படத்தில் இதை தவற விட்டு விடாதீர்கள்
அந்த காட்சியை யாரும் தவறவிட்டு விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பொதுவாக படம் தொடங்கிய பத்து நிமிடம் கழித்து தான் பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டருக்குள் வரத் தொடங்குவார்கள்.
இளைஞர்கள், விக்ரம் ரசிகர்கள் வேண்டுமானால் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் விடிய விடிய காத்திருப்பார்கள். குடும்பமாக வரும் ஆடியன்ஸ் சற்று காலதாமதமாகத்தான் வருவார்கள்.
இதனால் நிறைய பேர் அந்த காட்சியை தவறவிட வாய்ப்பிருக்கிறது. ஆகையால் மொத்த படமும் புரியாத புதிராக இருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது. இதை சற்று யோசித்து இயக்குனர் செயல்பட்டு இருக்கலாம்.
மேலும் இதுவே வீர தீர சூரன் படத்திற்கு மைனஸ் ஆக அமையவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சித்தா படம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியாகி குடும்ப ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்தது. அதேபோல் வீரதீர சூரன் படமும் கொண்டாடப்படும் என படக்குழு நம்புகின்றனர்.