வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

சைக்கோ தனத்தில் அலற விட்ட ரகுவரனின் 6 படங்கள்.. நடிப்பை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த மார்க் ஆண்டனி

Raghuvaran best 6 movies: சகலகலா வில்லன் ரகுவரனின் நினைவு தினம் இன்று. ரகுவரனை திரையில் பார்த்து பயந்த 90ஸ் கிட்ஸ்கள் இந்த ஆறு படத்தில் ஏதாவது ஒன்றை பார்த்து அவரை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள். ரகுவரனை பத்தி தெரியும், ஆனால் அவர் நடிச்ச படத்தை பத்தி தெரியாது என்று சொல்லும் 2கே கிட்ஸ்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் இந்த ஆறு படத்தையும் பார்த்து விடுங்கள். அப்பத்தான் இப்படி ஒரு மகா கலைஞன் தமிழ் சினிமாவில் வாழ்ந்தது எல்லா தலைமுறைக்கும் தெரியும்.

புரியாத புதிர்: ஐ நோ என்ற ஒற்றை வார்த்தையை வைத்து ஒரு படம் முழுக்க மிரட்ட முடியும் என்றால் அது ரகுவரனுக்குத் தான் சாத்தியம். பொண்டாட்டியின் மீது சந்தேகப்படும் சாடிஸ்ட் கணவனாக ரகுவரன் இந்த படத்தில் மிரட்டி இருப்பார். இந்த படத்தின் ஒரு காட்சியில் ரகுவரனின் நடிப்பை பார்த்து தானே பயந்துவிட்டதாக புரியாத புதிர் படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சில பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

தியாகு: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தியாகு. இந்த படத்தில் ரகுவரன் மது பழக்கம் அதிகம் கொண்ட நபராக நடித்திருப்பார். தியாகு என்ற கேரக்டரில் உண்மையாகவே வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக ரகுவரன் அதிகம் குடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ரகுவரனின் நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.

காதலன்: பிரபுதேவா மற்றும் நக்மா நடிப்பில் 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி செம ஹிட் அடித்த படம் தான் காதலன். இந்த படத்தில் ரகுவரன் மாலி என்கிற மல்லிகா அர்ஜுன் கேரக்டரின் அடித்திருப்பார். குண்டு வைத்து மக்கள் மீது தீவிரவாதத்தை நடத்தும் கொடூர வில்லனாக மிரட்டி இருப்பார்.

பாட்ஷா: சூப்பர் ஸ்டார் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம் தான் பாட்ஷா. இந்த படத்தின் வில்லன் கேரக்டர் மார்க் ஆண்டனி இல்லை என்றால் பாட்ஷா கண்டிப்பாக கிடையாது. பாம்பே நகரத்தோடு மார்க் ஆண்டனி க்ளோஸ் என்று பார்த்தால் கிளைமாக்ஸ் சீனில் என்ட்ரி கொடுத்து அலற விட்டிருப்பார்.

தொட்டா சிணுங்கி: ரகுவரன், ரேவதி, தேவயானி ஆகியோர் இணைந்து நடித்த படம் தொட்டா சிணுங்கி. இந்த படத்தில் ரகுவரன் நடித்த கோபால் கேரக்டரை வில்லன் என்றெல்லாம் ஈசியாக சொல்லிவிட முடியாது. கொடூரமான சேடிஸ்ட்டாக மிரட்டி இருப்பார்.

சம்சாரம் அது மின்சாரம்: சம்சாரம் அது மின்சாரம் படத்தின் சிதம்பரம் கேரக்டரை வில்லன் என்றெல்லாம் சொல்ல முடியாது. தன்னலம் மட்டுமே பார்க்கும் மூத்த பிள்ளை. 400 ரூபாய்க்காக அப்பாவிடம் சண்டை போட்டு வீட்டுக்கு நடுவே கோடு போட வைக்கும் காட்சியிலும், செலவை சமாளிக்க முடியாமல் அப்பா காலில் வந்து விழும் காட்சியிலும் ரசிக்க வைத்திருப்பார்.

- Advertisement -spot_img

Trending News