சரியான பாதையை தேர்ந்தெடுக்க குழம்பும் சூர்யா.. புறநானூறு ஒதுக்கியதால் படும் பாடு

சூர்யா தேடி போகும் இயக்குனர்களும், சூர்யாவை தேடி வரும் இயக்குனர்கள் என எவருக்கும் செட் ஆகாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சூர்யாவின் கதை. இடையில் ஹிந்தி பக்கம் போய்விடலாம் மும்பை பக்கம் செட்டிலாகி இருந்தார் . ஆனால் அதுவும் செட் ஆகவில்லை.

பாலிவுட்டில் கர்ணா என்ற ஒரு ஹிந்தி படம் நடிக்க போகிறார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டது. இப்பொழுது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. தெலுங்கு பக்கம் போய் ஒரு படம் பண்ணலாம் என இயக்குனர்களை தேடி வந்தார். அங்கேயும் அவருக்கு நேரம் சரியில்லை.

ஹிந்தியில் ஓம் பிரகாஷ் என்ற ஒரு இயக்குனரிடம் படம் பண்ணுவதாக இருந்தார். அதுவும் அவருக்கு கை கூடி வரவில்லை. இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த புறநானூறு படத்தையும் கைவிட்டு விட்டார். இப்பொழுது அந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

புறநானூறு ஒதுக்கியதால் படும் பாடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்காராவின் புறநானூறு படம் இப்பொழுது வேறு ஒரு பெயரில் படமாக உள்ளது. ஆனால் அதற்கு இன்னும் சூர்யா தரப்பில் இருந்து NOC கொடுக்கவில்லை. அதையும் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி எந்த பக்கம் போனாலும் சூர்யாவிற்கு கதவுகள் மூடப்படுகிறது. ஏற்கனவே இவர் நடிப்பதாக இருந்த வாடிவாசல் படமும்என்னானது என்று தெரியவில்லை. கங்குவா படம் முடிந்த பிறகு தான் சூர்யா கதையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதே தெரியும்.