Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் மனோஜ் நல்ல நிலைமைக்கு வர வேண்டும். ஆனால் அதற்கு ரோகினி அப்பா மனசு வைத்தால் மட்டும் தான் முடியும் என்று விஜயா நினைக்கிறார். அதற்காக ஜெயிலில் இருக்கும் ரோகினியின் அப்பா வெளியே வந்தால் மட்டும் தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்று கோயிலில் பரிகாரம் பண்ண முடிவெடுக்கிறார்.
ஆனால் அந்த பரிகாரம் ரோகிணி செய்ய வேண்டும் என்பதால் ரோகிணியை விரதம் இருந்து கோவிலுக்கு பூஜை பண்ணுவதற்கு கூப்பிடுகிறார். அத்துடன் குடும்பத்துடன் சேர்ந்து கோயிலுக்கு போய் வேண்டிட்டு வரவேண்டும் என்று அனைவரையும் அழைக்கிறார். ஆனால் முத்து இல்லாததால் மீனாவிடம் சொல்லி போன் பண்ணி உன் வீட்டுக்காரனை வரச் சொல்லு என்று விஜயா சொல்கிறார்.
உடனே மீனா, முத்துவுக்கு போன் பண்ணி விஜயா சொன்ன விஷயத்தை சொல்லி கோவிலுக்கு வர சொல்கிறார். ஆனால் முத்து கனடாவில் இருந்து வரும் ஜீவாவை கூட்டி வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது போற வழியில் கோயிலுக்கு போயிட்டு போகலாமா என்று முத்து கேட்கிறார். அதற்கு அந்த ஜீவா ஒன்றும் பிரச்சினையில்லை போற வழி தானே கோவில் போயிட்டே என்ன டிராப் பண்ணுங்க என்று சொல்கிறார்.
டோரா புஜ்ஜியை பார்த்த மனோஜ்
பிறகு குடும்பத்தில் இருந்து அனைவரும் பொன்னியம்மன் கோவிலுக்கு போய் விடுகிறார்கள். அதே மாதிரி முத்துவும் அங்கே போய் விடுகிறார். அங்கே போன இடத்தில் ரோகிணி தலையில் மீனாவை தண்ணி ஊற்ற வைத்து அங்கபிரதட்சணம் செய்ய வைத்து கையில் சூடனை ஏற்றி பூஜை பண்ண வைக்கிறார். இதெல்லாம் எதிர்பார்க்காத ரோகிணி, விஜயா சொன்ன படி அனைத்து பரிகாரங்களையும் இஷ்டமே இல்லாமல் கஷ்டப்பட்டு பண்ணுகிறார்.
அடுத்து முத்து, காரில் டோரா புஜ்ஜி மாதிரி இருக்கும் ஜீவாவை உட்கார வைத்து விட்டு கோயிலுக்குள் போகிறார். அந்த நேரத்தில் எதேர்ச்சியாக மனோஜ் ஃபோன் பேசிக் கொண்டு வருகிறார். இதை காரில் இருக்கும் ஜீவா பார்த்து விடுகிறார். உடனே மனோஜ் பார்த்து விடக்கூடாது என்பதற்காக காருக்குள்ளேயே மறைந்து இருக்கிறார்.
அத்துடன் முத்துவிடம் சொல்லாமல் காரில் இருந்து தப்பித்து எஸ்கேப் ஆகப் போகிறார். ஆனால் போகும்போது மனோஜ் ஜீவாவை கொஞ்சம் பார்த்து விடுகிறார். ஆனால் அவருடைய கெட்டப் டோரா புஜ்ஜி மாதிரி இருப்பதால் சந்தேகத்துடனே புலம்பிக்கொண்டு போய்விடுகிறார். இதனை தொடர்ந்து ஜீவா, முத்து கண்ணில் சிக்க போகிறாரா அல்லது ரோகினி இடம் மாட்டப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.