வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அமீரிடம் மயங்கிப்போன பாவனி.. பிபி ஜோடிகள் மேடையில் நினைத்ததை சாதித்துக் காட்டிய மாஸ்டர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாவனி மற்றும் அமீர். ஏற்கனவே கணவரை இழந்த பாவனி தன்னிச்சையாக தன்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல போராடி வந்தார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அமீர் நுழைந்தார்.

ஆரம்பத்தில் பாவனியிடம் விளையாட்டாக பேச ஆரம்பித்த அமீர் ஒரு கட்டத்திற்கு மேல் அவரை காதலித்தார். ஆனால் பாவனி அமீருடன் நட்பாக தான் பழகி வருகிறேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதன் பின்பு பிக் பாஸ் இறுதி வரை அமிர், பாவனி இருவரும் பயணித்தனர்.

Also Read : காதலை உறுதி செய்த பிக்பாஸ் பாவனி, அமீர்.. விஜய் டிவி உருவாக்கிய அடுத்த ஜோடி

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பிபி ஜோடிகள் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடனம் ஆடுவார்கள். இந்நிலையில் பிபி ஜோடிகள் இரண்டாவது சீசனில் அமீர் மற்றும் பாவனி இருவரும் ஜோடியாக நடனம் ஆடிவந்தனர். இதிலிருந்து பாவனி குடும்பத்திற்கும் அமீர் மீது நல்ல அபிப்ராயம் வந்தது.

மேலும் சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடப்பது போல கோரியோகிராப் அமைத்திருந்தார்கள். அப்போது இருவருக்கும் நிஜமாகவே திருமணம் நடந்தது போல ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த பைனலில் அமீர், பாவனி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

Also Read : அமீர்-பாவனி திருமண சர்ச்சை.. விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடியில் இருந்து விலகலா?

இது குறித்து பாவனி தனது சமூக வலைத்தளத்தில் அமீரை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார். அதாவது டான்ஸ் என்றாலே எனக்கு ஒரு பயம், ஆனால் நீங்கள் ஒரு நல்ல டான்ஸ் மாஸ்டராக என்னை நிரூபித்து விட்டீர்கள். ஒன்றுமே ஆடத் தெரியாத ஒருவரை வெற்றி பெறும் அளவிற்கு ஆட வைத்துள்ளீர்கள்.

எனக்கு நல்ல உறுதுணையாளராக, நல்ல நண்பராக எப்போதுமே இருந்திருக்கிறீர்கள். நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்தே தொடங்கலாம், அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் அமீர். ஐ லவ் யூ என்று பாவனி போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பிபி ஜோடிகள் வெற்றியாளர் என்று மட்டுமல்லாமல் பாவனி காதலை ஏற்றுக் கொண்டதால் அமீருக்கு டபுள் ட்ரீட் வந்துள்ளது.

Also Read : 1000 கோடி தூக்கி கொடுத்தம் மறுத்த ஹீரோ.. என்னப்பா இது பிக் பாஸ்க்கு வந்த சோதனை!

Trending News