வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டாக்டர் பாரதிக்கு இவ்வளவு அறிவா.. தீவிரவாதிகளுக்கு போட்டோ ஸ்கெட்ச்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி முதன்மை மருத்துவராக வேலை செய்யும் விக்ரம் பாபு ஹாஸ்பிடலை தீவிரவாதிகள் தங்கள் பிடியில் வைத்துள்ளனர். கொடூரமாக நடந்து கொள்ளும் தீவிரவாதிகளிடமிருந்து அப்பாவி மக்களையும் தன்னுடைய குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதி பக்கா பிளான் ஒன்றை போட்டிருக்கிறார்.

அதாவது அந்த மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சென்ட்ரல் மினிஸ்டரின் ஹாட் ஆபரேஷனை பாரதி செய்யவுள்ளார். அந்த ஆபரேஷன் மட்டும் நல்லபடியாக நடந்து முடியவில்லை என்றால், பாரதியின் இரண்டு மகள்கள் ஹேமா, லட்சுமி இருவரின் உயிர் போய்விடும் என்றும் தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர்.

தன்னுடைய மகள்கள் மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதி புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறார். சென்ட்ரல் மினிஸ்டர் ஹாட் ஆபரேஷனுக்கு தேவையான மருந்துகளை வெளியில் இருந்து வர வைப்பதற்காக பிரிஸ்கிரிப்ஷன் ஒன்றை வெளியில் அனுப்புகிறார்.

Also Read: தீவிரவாதிகளால் பதட்டத்தில் நர்சுகள்.. பல்ஸ் கூட பிடிக்கத் தெரியாத பாரதி செய்யப்போகும் ஆப்பரேஷன்

அதில் பாரதியின் கையெழுத்தை மாற்றி போட்டு, அந்த பிரிஸ்கிரிப்ஷனில் ஏதோ ஒன்று சொல்ல வருவதை போலீசுக்கு காட்டியுள்ளார். இதனால் பாரதியுடன் நீண்ட நாட்களாக வேலை செய்யும் மருத்துவர் ஒருவரை வரவைத்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை பார்க்க சொல்கிறார்கள்.

ஹாட் ஆபரேஷனுக்கு தேவையான மருந்துகளுடன் தீவிரவாதிகளை மயக்க நிலை அல்லது தூக்க நிலைக்கு போக வைக்கிற ட்ரக் ஒன்றை, ஆபரேஷனுக்கு தேவையான மருந்துகளுடன் அனுப்பி வைக்கும்படி பாரதி சொல்லியிருப்பார். இதைப் புரிந்து கொண்ட போலீசும் அவர் சொன்னபடியே செய்கிறது.

Also Read: தனி ஒருவனாக தீவிரவாதிகளிடமிருந்து போராடும் பாரதி.. நெல்சன் பார்த்தா சினிமாவை விட்டு ஓடிருவாரு

இதன்பிறகு பாரதி ஸ்கெட்ச் போட்டபடி தீவிரவாதிகளுக்கு அந்த ட்ராக்கை எப்படியோ கொடுத்து, அவர்கள் அனைவரையும் மயங்கி விழ வைக்கப்போகிறார். அதன் பிறகு போலீஸ் சுலபமாக ஹாஸ்பிடலுக்கு நுழைந்து, தீவிரவாதிகளை கையும் களவுமாக பிடிக்க போகிறது.

பத்து வருடங்களாக மனைவியை சந்தேகப்பட்டு, தன்னுடைய மகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்து உறுதி செய்ய முடியாத முட்டாள் பாரதிக்கு இவ்வளவு அறிவா! என சின்னத்திரை ரசிகர்கள் பாரதியை சோஷியல் மீடியாவில் பங்கம் செய்கின்றனர்.

Also Read: சிவகார்த்திகேயன் முன்னிலையில் RJ விக்னேஷ்க்கு டும் டும் டும்.. ஆடி மாசம் முடிஞ்சது தான், அடுத்தடுத்து திருமணம்

Trending News