வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

மார்ச் 27 வரை பிரச்சனை இல்லாமல் போகும் டிராகன்.. தமிழ்நாட்டில் மட்டும் ஏஜிஎஸ் க்கு அடித்த ஜாக்பாட்

வெறும் 35 கோடிகளில் எடுக்கப்பட்ட டிராகன் படம் இன்று வரை 120 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மற்றும் சராசரியாக ஒரு நாளைக்கு 8 கோடிகள் வசூல் செய்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்கள் தியேட்டரில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசான டிராகன் படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாய் 75 கோடிகள் வசூல் செய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக எந்த ஒரு பெரிய படமும் தியேட்டரில் ரிலீஸ் ஆகாததால் இந்த படம் தொடர்ந்து ஓடி வசூல் சாதனை செய்து வருகிறது.

இதனால் ஏஜிஎஸ் நிறுவனம் ஹப்பி மூடில் இருக்கிறது. செலவழித்த தொகையை விட இந்த படம் ஐந்து மடங்கு லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஒரு படத்தையும் பிரதீப் ரங்க நாதனை வைத்து எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் அர்ச்சனா கல்பாத்தி.

இனிமேல் பெரிய படம் என்று பார்த்தால் மார்ச் 27ஆம் தேதி வெளிவரும் வீர தீரன் சூரன் படம் தான். அதனால் இன்னும் 20 நாட்கள் இந்த படம் ஓடினால் 200 கோடிக்கு மேல் வசூலித்து விடும். விக்ரம்மின் வீரதீரசூரன் படம் ரிலீஸ் நேரத்தில் தான் இது தியேட்டரை விட்டு வெளியேறும் என்று யூகிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வசூல் சாதனை செய்துள்ளது. ஏற்கனவே லவ் டுடே படத்தை தயாரித்ததாலும் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. இப்பொழுது அதே படத்தை ஹிந்தியிலும் தயாரித்து வசூலை குவித்துள்ளது.

Trending News