வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இனி வீடு தேடி வரும் மது, குடித்துவிட்டு வீட்டிலேயே மட்டையாகிடுங்க!. குடி பிரியர்கள் கொண்டாட்டம்

Home delivery Alcohol: என்னையா நடக்குது இங்க என்று கேட்கும் அளவிற்கு புதுமை என்கிற பெயரில் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் ஒவ்வொரு விஷயங்களும் மாறிக்கொண்டே வருகிறது. அதாவது முன்பெல்லாம் வீட்டில் சமைத்து சாப்பிட்டு மகிழ்வோடு இருப்பது வழக்கமாக இருந்தது. காலம் மாற மாற மக்கள் ஒரு வித்தியாசமான உணவை சாப்பிட ஆசைப்பட்டு வெளியில் ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

ஆனால் இப்பொழுது வீட்டில் சமைப்பதற்கு சோம்பேறியாக இருக்கிறது வெளியே சாப்பிட்டு வரலாம் என்று அடிக்கடி குடும்பத்துடன் போகும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இதை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் வெளியே போய் கூட நீங்க கஷ்டப்பட வேண்டாம் உங்களை தேடி நாங்களே சாப்பாடு கொண்டு வரும் என்று ஸ்விக்கி, சோமாட்டோ மற்றும் சில ஆப்புகள் மூலம் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறது.

வீடு தேடி வரும் மதுபானங்கள்

போதாதற்கு தற்போது வீடு தேடி மதுபானங்கள் விற்பனை செய்யலாம் என்று புதுத் திட்டத்தையும் கொண்டு வரப் போகிறார்கள். இந்த டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப மொபைலில் ஒரு விரலை அமுக்கினால் போதும் இரண்டு நிமிஷத்தில் எல்லாம் வீடு தேடி வந்து விடுகிறது.

அதே மாதிரி ஸ்விக்கி, பிக் பாஸ்கட், சோமாட்டோ , பிளிங்இட் தளங்கள் மூலமாக மது பிரியர்களுக்கு ஆல்கஹால் குறைந்த பீர் மற்றும் ஒயின் உள்ளிட்ட மதுபான வகைகள் ஆன்லைன் மூலம் ஆர்டர் பண்ணி ஹோம் டெலிவரி செய்யும் வசதி அமுல்படுத்த சில நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாயிருக்கிறது.

ஏற்கனவே இந்த வசதி ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்து நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா போன்ற மாநிலங்களிலும் வீட்டிற்கு நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்ய அனுமதிக்கும் திட்டங்களை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்று பக்க பக்கமாக வசனங்கள் இருந்தாலும் மக்கள் டாஸ்மார்க் கடையை தேடி போய் மதுவை வாங்காமல் இருப்பதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இன்னும் எளிதாக ஆல்கஹால் குறைந்த மதுபானங்கள் வீடு தேடி கிடைக்கிறது என்றால் இனி வீட்டில் சொகுசாக சாப்பாடுகளை ஆர்டர் போடுவது மதுபானத்தை ஆர்டர் போடுவது என்று குடும்பத்துடன் சாப்பிட்டு குடியும் குடித்தனமாக வாழ்க்கையை நடத்தி வீட்டுக்குள்ளேயே மட்டையாகி விடுவார்கள். இதை தான் புதுமையான மாற்றம் என்று நினைக்கிறார்கள் போல.

கடையில் போய் வாங்க கூச்சப்பட்டு இருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போன்ற சிலர் இந்த மாதிரி ஒரு ஆப் வந்துவிட்டால் அவர்களும் ஈசியாக இதில் அடிமையாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் ஆல்கஹால் குறைந்த மதுபானத்தை டெலிவரி செய்வார்கள். அப்புறம் போக போக அனைத்து விதமான மதுவையும் டெலிவரி செய்து வாழ்க்கையை குட்டி சுவறாக ஆக்கி விடுவார்கள். அதனால் இது தொடர்பான ஆலோசனைகளை எடுத்து வரும் மாநிலங்கள் இந்த மாதிரி விஷயங்களை நிராகரிக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருக்கிறது.

பிரம்மாண்டமாக நடந்த ஆனந்த் அம்பானியின் திருமணம்

- Advertisement -spot_img

Trending News