Rajini’s heroine: பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோயின்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. பெரும்பாலும் இவரது படங்கள் போதை, கடத்தல், மாபியா போன்ற கலாச்சார பின்னணி கொண்ட படங்களாக தான் இருக்கும். இப்பொழுது கூலி படத்திற்கு ஹீரோயின் தேடும் வேலையில் இறங்கியுள்ளார் லோகேஷ்
ரஜினிகாந்துக்கு வயது மற்றும் கதாபாத்திரத்தை கருத்தில் கொண்டு அவருக்குஏற்ற ஹீரோயின்கள் அமைவது கடினம். இந்த மாதிரி விஷயங்கள் லோகேஷ் படங்களுக்கு பெரும் கஷ்டம் இல்லை. ஏனென்றால் அவர் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்காது.
அதைப்போல்தான் ரஜினி தற்போது நடித்து வரும் கூலி படத்திலும் கதாநாயகிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லையாம். இதனால் பல ஹீரோயின்கள் மறுத்த போதிலும் லோகேஷ் கஷ்டப்பட்டு தரமான ஒரு நடிகையை தேர்ந்தெடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டாருக்கு ஹீரோயினாக கிடைத்த பொக்கிஷம்
சமுத்திரம், விருமாண்டி, சுல்தான் போன்ற படங்களில் நடித்தவர் அபிராமி. இப்பொழுது செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பி வருகிறார். கமல் நடித்துக் கொண்டிருக்கும் மணிரத்தினத்தின் தக்லைப் படத்திலும் இவர் நடிக்கிறார். இப்பொழுது ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என 4 மொழிகளிலும் இப்பொழுது அபிராமிக்கு செம மார்க்கெட். தமிழில் மட்டும் கைவசம் 5 படங்கள் வைத்திருக்கிறார். இதுபோக மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு ஹீரோயின் செகண்ட் இன்னிங்ஸில் கலக்குவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அபிராமி அதை செய்து காட்டியிருக்கிறார்.
- ரஜினியின் 38 வருட பகையை தீர்த்து வைத்த லோகேஷ்
- ரஜினி இன்றுவரை விட்டுக் கொடுக்காத 5 நடிகர்கள்
- வேட்டையனின் வெற்றிக்காக இமயமலை செல்லும் ரஜினி