ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யை காக்க வைத்த நகைச்சுவை நடிகர்.. அலட்சியம், ஈகோவால் சரிந்த மார்க்கெட்

Comedian Vadivelu: தன்னுடைய அடுத்த கட்ட படங்களில் தொடர் வெற்றியை சந்தித்து வரும் பிரபலம்தான் விஜய். அவ்வாறு இருக்க இவர் வருகைக்கு காத்திருக்கும் நிலையில் இவரை காக்க வைத்த ஒரு நபரை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தன் திறமையால் படிப்படியாக முன்னேறி சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று, தன்னை ஒரு காமெடியனாக அடையாளப்படுத்திக் கொண்டவர்தான் வடிவேலு. இந்நிலையில் தற்பொழுது சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்படும் இவர் முட்டி மோதி வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

Also Read: சீரியலில் இருந்து சினிமாவில் சாதித்த 6 நடிகர்கள்.. விடுதலை குமரேசனாக முதல்படி எடுத்து வைத்த சூரி

அதற்கு காரணமாக பார்க்கையில், சினிமாவில் சக நடிகர்கள் இடையே இவர் நடந்து கொண்ட விதம், அலட்சியம் போன்றவை இவரின் மார்க்கெட்டை சரி செய்தது. அதன் பின் சரிவர பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் பல சர்ச்சைக்கு ஆளாகி சினிமாவில் இடைவெளி விட்டு காணப்பட்டு வந்தார்.

அதன்பின் இவர் மேற்கொண்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்கள் போதிய வரவேற்பை பெறாமல் இருந்து வந்த நிலையில், மாமன்னன் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறு சினிமாவிற்கு கேப் விட்டும், நடிக்கும் ஆசையில் அடுத்த கட்ட முயற்சிகளை தொடங்கி வருகிறார்.

Also Read: விடாமுயற்சியின் வில்லன் லிஸ்டில் இருக்கும் 5 நடிகர்கள்.. சிங்கத்தோட மோத சிறுத்தையை தேடும் மகிழ்

இருப்பினும் விஜய் நடிப்பில் வெளிவந்த படமான வில்லு படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய்யை காக்க வைத்து 9,10 மணி அளவில் தான் ஷூட்டிங் இருக்கு வந்தாராம். மேலும் தனுஷின் நடிப்பில் வெளிவந்த படமான படிக்காதவன் படத்தில் முதலில் இவர்தான் நடிப்பதாக இருந்ததாம். இவரின் இத்தகைய அலட்சியத்தால் அப்படத்தில் விவேக் நடிக்க முடிவெடுக்கப்பட்டதாம்.

தொடர்ந்து இது போன்ற நடவடிக்கையாலும், சக நடிகர்களின் வளர்ச்சியை பிடிக்காமல் இவர் மேற்கொண்ட மூர்க்க வேலைகளாலும் இந்நிலைக்கு ஆளாகினார் என்றே கூறலாம். தனக்கு தானே வில்லனாய் மாறிக்கொண்டு இவர் எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

Also Read: அரசியலில் பதம் பார்க்க லியோவை பகடைக்காயாக யூஸ் பண்ணும் விஜய்.. வாயடைத்து போய் நிற்கும் லோகேஷ்

Trending News