Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஞானம் புத்தி தெரிந்தும் மொத்த பணத்தையும் கையில் கொடுத்தது ரேணுகாவின் முதல் தப்பு. இதுல அவர் பிசினஸ் ஆரம்பிக்கப் போகிறார் கடை நடத்தப் போகிறார் என்று சொல்லும் பொழுதே ரேணுகா தட்டிக் கேட்டு இருந்தால் இவ்வளவு தூரத்துக்கு போக வாய்ப்பே இல்லை.
அதாவது கருவாட்டுக் கடையை வைத்து நான் கோடீஸ்வரனாக ஆகிவிடுவேன் என ஞானம் நினைத்து அதற்கான ஏற்பாடுகளை கரிகாலன் மூலம் செய்து வந்தார். ஆனால் குணசேகரன் ஒத்த போன் பண்ணி மொத்த காரியத்தையும் கெடுத்து விட்டார். கரிகாலன் ஒரு பிராடு, கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் கடத்திய பொருள்கள் என்று போலீஸ் ஞானத்திடம் சொல்கிறார்கள்.
இதற்கிடையில் போலீஸ், ஞானத்தின் கடைக்கு வந்ததுமே துண்ட காணும் துணிய காணும் என்று கரிகலன் ஓட்டமாக ஓடிப் போய்விட்டார். கடைசியில் மொத்த பணத்தையும் இழந்து கடையும் இல்லாமல் நஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் அளவிற்கு ஞானத்தின் நிலைமை மாறிவிட்டது. போதாதற்கு ஞானம் ஏதோ வேண்டாத வேலை தான் பண்ணுகிறார் என்று தெரிந்தும் ஒன்னும் பண்ண முடியாமல் புலம்பி கொண்டு இருந்த ரேணுகாவிற்கு இது தேவை தான்.
ஆடுபுலி ஆட்டம் ஆடும் குணசேகரன்
அதுமட்டுமில்லாமல் ரேணுகா போட்டிருந்த கமல், நந்தினி கையில் போட்டிருந்த வளையலையும் தாரவாத்து கொடுத்து ஒட்டு மொத்த பேரும் கூமுட்டைகள் தான் என்று நிரூபித்து விட்டார்கள். குணசேகரன் சொல்வது தவறாக இருந்திருந்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது. அதாவது என்னைத் தவிர இவர்களுக்கு எல்லாம் வாய் சவால் மட்டும் தான் இருக்கிறது. காரியத்தில் ஒன்னும் கிழிக்க மாட்டார்கள் என்று அடிக்கடி சொல்லி இருப்பார்.
அது தற்போது உண்மையாகிவிட்டது. அது மட்டும் இல்ல கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15 லட்ச ரூபாயும் இப்படி போய்விட்டது என்று ரேணுகா ஆத்திரத்தில் ஞானத்திற்கு பளார் என்று அறைவிட்டார். அது மட்டும் இல்லாமல் இது என்னுடைய பணம் என்று குத்தி காட்டி சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு முறை கொடுத்த ரேணுகாவிற்கு இப்படி என்றால் குணசேகரன் தம்பிகளை குத்தி காட்டி பேசுவது தவறு ஒன்றுமில்லை.
ஏனென்றால் அவரும் தற்குறியான தம்பிகளை வைத்து ஒத்த ஆளாக நின்னு சமூகத்தில் போராடி இந்த அளவுக்கு ஜெயித்திருக்கிறார் என்றால் அவருக்கு இருக்கும் திறமை பாராட்டக்கூடியது தான். அப்படி பார்த்த அண்ணன் குணசேகரனை வேண்டாம் என்று உதறிவிட்டு மனைவி பின்னாடி போன தம்பிகளுக்கு இது தேவைதான்.
குணசேகரனின் வயிற்று எரிச்சல் தான் ஞான சூனியத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தற்போது ரேணுகாவிற்கும் ஞானத்திற்கும் எந்த ஒரு விஷயம் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கப் போகிறது. அடுத்து கதிருக்கு ஒரு சம்பவம் காத்துக்கொண்டிருக்கிறது.
அதாவது முன்னாடி பிளேபாயாக சுற்றிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை வைத்து கதிருக்கு ஒரு குடைச்சல் குணசேகரன் கொடுக்கப் போகிறார். இந்த சம்பவத்தால் நந்தினி, கதிரை வெறுத்து தனி மரமாக போகிறார். இப்படி ஒவ்வொரு கொக்கியாக போட்டு தம்பிகளின் வாழ்க்கையில் ஆடுபுலி ஆட்டம் ஆடப்போகிறார்.