இந்த 5 காரணங்களால் எதிர்நீச்சல் சீரியலுக்கு சங்கு ஊதிய சன் டிவி.. குணசேகருக்கு அள்ளி கொடுத்து தேய்ந்து போன TRP

Ethirneechal Serial: கடந்த வருடம் எதிர்நீச்சல் சீரியலின் கதை போல வருமா என்று அனைவரும் தூக்கிக் கொண்டாடிய ஒரே சீரியல் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை தான். அந்த அளவிற்கு ஆஹோ ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள். அதற்கேற்ற மாதிரி சீரியலும் நல்ல சூடு பிடித்து குடும்பத்துடன் பார்க்கும் படியாக சண்டை சச்சரவு, நக்கல், நையாண்டி அனைத்தும் கலந்து ஒரு உத்வேகத்துடன் வெளிவந்தது.

கிளைமேக்ஸ் காட்சியை நெருங்கிய எதிர்நீச்சல்

ஆனால் இதெல்லாம் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இருக்கும் வரை தான். எப்பொழுது இவர் மறைந்தாரோ, அப்பொழுது இருந்து இந்த நாடகத்திற்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது. அதாவது இவருக்கு பதிலாக வேல மூர்த்தி, குணசேகரன் கதாபாத்திரத்துக்கு அடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் இவருடைய நடிப்புக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் போக போக நாடகத்துக்காக இவரை ஏற்கும் படியாக அமைந்துவிட்டது. ஆனால் வந்த பிறகு இவருடைய வன்மையான பேச்சு பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து விட்டது. பழைய குணசேகரனாக இருந்தவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும் ரசிக்கும்படியாக அமைந்தது.

ஆனால் இப்பொழுது டயலாக் எதுவும் மக்களிடம் அந்த அளவிற்கு ரீச் ஆகவில்லை. அத்துடன் தற்போது ரிலாக்ஸேசன் பண்ணும் அளவிற்கு காமெடி எதுவும் இல்லை. ஒரு வெறித்தனமான வன்மமும் வசனமும் மட்டுமே நிறைந்தது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது இடத்திற்கு போனது.

இதனை தொடர்ந்து புதுப்புது கேரக்டர்களை கொண்டு வந்து கதையை குழப்பி பார்க்கவே சுவாரஸ்யம் இல்லாமல் அமைந்துவிட்டது. அத்துடன் ஆதிரை, சாறுபாலா, எஸ்கேஆர், அரசு, ஃபர்கானா, கௌதம் போன்ற இந்த கேரக்டர்களை குழி தோண்டி புதைத்து விட்டு புதுசாக ஜனனியின் அப்பத்தா குடும்பத்தை கொண்டு வந்து பல குளறுபடிகளை ஏற்படுத்தினார்.

கடைசியில் அதுவும் அந்தரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த நாடகத்திற்கு அப்பத்தா கேரக்டர் ரொம்பவே முக்கியமாக அமைந்தது. ஆனால் அந்த கேரக்டர் இப்பொழுது வரை என்ன ஆச்சு என்று தெரியாமல் புரியாத புதிராகவே இருக்கிறது. இப்படி பல சொதப்பல்களை தொடர்ந்து கொண்டு வந்ததால் சமீபத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த எதிர்நீச்சல் சீரியல் ஏழாவது இடத்திற்கு போய்விட்டது.

இதனால் போட்ட காசையும் எடுக்க முடியவில்லை. இதில் வேற புதுசாக வந்த குணசேகரனுக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்ததால் சன் டிவிக்கு பெரிய நஷ்டம் ஆகிவிட்டது. இப்படியே தொடர்ந்து நாடகம் அமைந்தால் போட்ட காசையும் எடுக்க முடியாமல் கேள்விக்குறி ஆகிவிடும் என்பதினால் இந்த நாடகத்திற்கு மொத்தமாக சங்கு ஊதலாம் என்று கிளைமாக்ஸ் கதையை சன் டிவி நிறுவனம் எழுத சொல்லிவிட்டது.

அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் இந்த நாடகத்திற்கு எண்டு கார்டு போட தயாராகி விட்டார்கள்.

எதிர்நீச்சல் முடிவுக்கு காரணமாக அமைந்த குணசேகரன்

Next Story

- Advertisement -