சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

துல்கர் சல்மானை இயக்கும் அட்லீயின் சிஷ்யன்.. டைட்டிலை வித்தியாசமா இருக்கே! மாஸ் கூட்டணி

Dulquer Salmaan Next Movie Update: ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து இப்போது டாப் இயக்குனராக இருப்பவர்தான் அட்லீ. இப்போது இவர் தமிழிலும் பாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இவருடைய அசிஸ்டன்ட் ஒருவர் இயக்கும் படத்தில் தான் துல்கர் சல்மான் அடுத்து நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் டைட்டிலும் தற்போது வெளியாகி உள்ளது. கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் இந்த படத்தின் தலைப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அட்லியின் உதவி இயக்குனரான கார்த்திகேயன் வேலப்பன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

Also Read: அட்லியால் முடியாததை சாதித்த வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணையும் நடிப்பு அரக்கி

ஏற்கனவே அட்லீயின் உதவியாளர்கள் சிலர் திரைப்படங்கள் இயக்கி வரும் நிலையில், தற்போது கார்த்திகேயன் வேலப்பன் துல்கர் சல்மானை வைத்து ‘கோலி’ என்ற படத்தை இயக்கப் போகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப் போகிறது. மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஜோடி மலையாள படத்தில் இணைந்த நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: கிளைமாக்ஸ் வரை கணிக்க முடியாத 8 படங்கள்.. எப்படி இந்த மாதிரி கதைகள யோசிக்கிறாங்க!

அது மட்டுமல்ல இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இவ்வாறு மாஸ் கூட்டணி இணைந்திருக்கும் ‘கோலி’ படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் இனி வரிசையாக வெளியாகப் போகிறது. அது மட்டுமல்ல இந்த படத்தில் இன்னும் யார் யார் இணைந்து நடிக்கிறார்கள் என்பதையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பட குழு விரைவில் வெளியிட உள்ளது.

அட்லி எப்படி தமிழில் கலக்கி விட்டு இப்போது பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி திரை உலகையும் கலக்கி கொண்டு இருக்கிறாரோ, அதேபோல அவரது அசிஸ்டன்ட் டைரக்டர் ஆன கார்த்திகேயன் வேலப்பனும் துல்கர் சல்மானை வைத்து தரமான சம்பவத்தை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கானஅறிவிப்பு தற்போது வெளியான நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கார்த்திகேயன் வேலப்பனுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Also Read: விஜய் முடிவால் அட்லீக்கு வந்த பெரிய வாய்ப்பு.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள போகும் லோகேஷ்

Trending News