Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

துணிவு சாயலில் மிரள வைக்கும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் டீசர்.. புரட்டிப்போடும் மிடில் கிளாஸ் வாழ்க்கை

துணிவு சாயலில் மிரள வைக்கும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் டீசர்.. புரட்டிப்போடும் மிடில் கிளாஸ் வாழ்க்கை

Dulquer Salmaan : தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் இப்போது லக்கி பாஸ்கர் என்ற படம் உருவாகி […]

Dulquer Salmaan : தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் இப்போது லக்கி பாஸ்கர் என்ற படம் உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் டீசர் தான் இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

துணிவு சாயலில் லக்கி பாஸ்கர்

சமீபகாலமாக பேங்க் ராபரி போன்ற கதைகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அதேபோல் துணிவு பட சாயலில் மிரள வைக்கும்படி தான் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் அமைந்துள்ளது. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த துல்கர் சல்மான் வங்கியில் வேலை பார்க்கிறார்.

வங்கியே ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது கணக்கில் பணம் இருக்கிறது. அதாவது மிடில் கிளாஸ் வாழ்க்கையில் ஒரு சாமானியன் செலவைக் குறைத்துக் கொண்டு எவ்வாறு சேமிக்கிறான் என்பது தான் லக்கி பாஸ்கார் கதை.

அதுவே போட்டி என்று வந்தால் ஒத்த ரூபாய் கூட இல்லாமல் செலவு செய்வோம், போடிக்கு ரெடியா என்று தெறிக்க விடுகிறார் து
ல்கர் சல்மான். ஒரு வங்கி ஊழியராக இருந்து எவ்வாறு பணம் சேர்க்கிறார், அதை எப்படி செலவு செய்கிறார் என்பதுதான் லக்கி பாஸ்கர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.