4 படத்திலும் வித்தியாசம் காட்டி கலக்கிய துல்கர் சல்மான்.. அத்தனையும் தூள் கிளப்பிய ஹிட்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் நுழைந்தவர் துல்கர் சல்மான். பொதுவாக ஒரு நடிகர் அவர்களது மொழியில் மட்டும் தான் சூப்பர் ஹிட் படங்களை கொடுக்க முடியும். ஆனால் துல்கர் சல்மான் கால் பதித்த எல்லா மொழிகளிலுமே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழியிலும் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இதனால் ஒரு பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு வித்தியாசமான கதைகளத்தால் எல்லா மொழியிலும் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் படங்களை தற்போது பார்க்கலாம்.

Also read:முன்றே நாள் வசூலில் பட்டையை கிளப்பும் சீதாராமம்.. 100 கோடி கலெக்சனில் துல்கர் சல்மானா.?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் : தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்சன், நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் நவீன திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குருப் : கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான க்ரைம் திரில்லர் படம் குருப். இந்தப் படம் இந்தியாவில் மோஸ்ட் வான்டெட் கிரிமினலான சுகுமார் குருப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. துல்கர் சல்மான் தயாரித்து, ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also read:துல்கர் சல்மானை காப்பி அடித்ததா வாரிசு படக்குழு.? தளபதியை காப்பாற்ற Otto நிறுவனம் வெளியிட்ட விளக்கம்

சீதாராமம் : சமீபத்தில் துல்கர் சல்மான் சீதாராமம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சுப் : 2022 ஆம் ஆண்டு பால்கி எழுதி, இயக்கிய ஹிந்தி மொழியில் வெளியான திரைப்படம் சுப். இந்த படம் உளவியல் திரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சன்னி தியோல், துல்கர் சல்மான் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Also read:முதல் நாளே வசூலை அள்ளிய சீதா ராமம்.. கோடிகளை குவித்த துல்கர் சல்மானின் படம்