ஈஸ்வரி எடுத்த முடிவு, கோபியை தண்ணீர் தெளித்து விட்ட குடும்பம்.. உதாசீனப்படுத்திய இனியா, ஓவராக பண்ணும் பாக்கியா

bhakkiyalakshmi (50)
bhakkiyalakshmi (50)

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாவிற்கு ஒரு நல்ல கணவராகவும் நடந்து கொண்டதில்லை. அம்மா அப்பாவுக்கு பொறுப்பான பிள்ளையாகவும் இருந்ததில்லை, ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணின ராதிகாவையும் சந்தோஷமாக வச்சிக்க தெரியவில்லை போன்ற பல விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார். ஆனால் பெற்ற பிள்ளைகளுக்கு அவரால் என்ன பண்ண முடியுமோ அதை எல்லாத்தையும் சரிவர செய்து வந்திருக்கிறார்.

எந்த இடத்திலும் பிள்ளைகளையும் இனியாவையும் விட்டுக் கொடுத்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ராதிகாவை விட்டுவிட்டு பாக்யா வீட்டில் தஞ்சம் அடைந்ததற்கு முக்கிய காரணம் இனியா பீல் பண்ணி பேசி, இருக்க வேண்டும் என்று சொன்னதனால் தான் கோபி, பாக்கியா வீட்டிலேயே தங்கினார். இதனை பிடிக்காமல் தான் ராதிகா, கோபியை விட்டு விட்டுப் போனார்.

அது மட்டுமல்ல எழிலுக்கு ஒரு தயாரிப்பாளர் மூலம் வாய்ப்பு வாங்கி கொடுத்தார், செழியனுக்கு நல்ல வேலை வாங்கி கொடுத்தார். இனியா என்னெல்லாம் ஆசைப்பட்டாலும் அது எல்லாத்தையும் நிறைவேற்றி வைத்தார். இப்படி பிள்ளைகளுக்கு ஏற்ற பொறுப்பான அப்பாவாகத்தான் இதுவரை கோபி நடந்து இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட கோபி தற்போது யாரும் இல்லாமல் தனியாக இருப்பது போல் ஃபீல் பண்ணுகிறார்.

அதாவது இனியும் இந்த வீட்டில் யாருக்காக இருக்க வேண்டும், யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை என்ற மன வருத்தத்தில் வீட்டை விட்டுப் போகிறேன் என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அதற்கு செழியன் அவருடைய முடிவில் நாம் தலையிட முடியாது என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி, இனியாவை பார்த்து நீயாவது சொல்லு என்று சொல்கிறார். அதற்கு இனியா யாரையும் நம் கட்டாயப்படுத்த கூடாது, அவருடைய இஷ்டம் என்று கோபியை உதாசீனப்படுத்தும் அளவிற்கு இனிய நடந்து கொண்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோபி அப்படியே கலங்கி போய்விட்டார். இவங்களுக்காக நம்முடைய வாழ்க்கையை விட்டுட்டு வந்திருக்கிறோம். ஆனால் யாருமே என்னைப் பற்றி யோசிக்கவில்லை என்ற வருத்தத்தில் ஈஸ்வரிடம் பீல் பண்ணுகிறார். ஈஸ்வரி யார் என்ன சொன்னாலும் நான் இருக்கிறேன் நான் உன்னுடன் வருகிறேன் என்று சொல்லி கோபியுடன் கிளம்புவதற்கு தயாராகி விட்டார்.

அந்த வகையில் ஈஸ்வரி முதல் முறையாக எடுத்த உருப்படியான விஷயம் இதுதான். அடுத்ததாக செல்வி வீட்டுக்காரர் பாக்யா வீட்டில் வந்து சண்டை போட்டதும் பக்கத்தில் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் இனிய காதல் விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் அப்பொழுது கூட செல்வி அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசி கோபி செழியன் செய்தது தவறுதான் என்று சொல்கிறார்.

செல்வி வீட்டுக்காரருக்கு எப்படி கோபம் வருகிறது அதே மாதிரி தான் கோபிக்கும் செழியனுக்கும் கோபம் வந்தது. ஆனால் அதை கண்டித்த பாக்கியா, செல்விடம் இதை பெரிசாக சொல்லிக் கொள்ளவில்லை. ஈஸ்வரியும் வெளியே போகிறேன் என்று சொல்லிய நிலையில் பாக்கிய அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

Advertisement Amazon Prime Banner