விஷால் கால்ஷீட் கொடுத்திருந்த படம் மார்க் ஆண்டனி. அந்த படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டது. படத்தின் சூட்டிங்கிற்கு விஷால் போகவே இல்லையாம். இழுத்தடித்துக் கொண்டே போயிருக்கிறார். இதனால் வெறுப்படைந்த தயாரிப்பாளர், விஷாலை ஒருமையில் திட்டியுள்ளாராம்.
இப்படி செல்லும் இடமெல்லாம் விஷாலின் ஈகோவை சீண்டி உள்ளார் தயாரிப்பாளர். உன் படத்தில் நடிக்க முடியாது என பதிலுக்கு விஷாலும் சண்டையிட்டு உள்ளார். அந்த தயாரிப்பாளரோ பார்ப்பவர்களிடம் எல்லாம், விஷால் என்னை ஏமாற்றி விட்டான் என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த எனிமி படத்தை தயாரித்த வினோத்குமார் தான் அந்த தயாரிப்பாளர். வினோத் குமாருக்கும், விஷாலுக்கும் இப்போது சண்டை முற்றி உள்ளது.
விஷால் உடம்பில் பிரச்சினை இருக்கிறது. அவருக்கு மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ரொம்ப காலமாகவே இருந்து வருகிறது என்று விஷால் தரப்பில் கூறப்படுகிறது. அதனால் விஷால் சொன்னபடி சூட்டிங் செல்ல முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்
வினோத் குமார், விஷால் பொய் சொல்லுகிறார் அவர் ஏற்கனவே கால்ஷீட் பிரச்சினை பல படங்களில் செய்துள்ளார். இந்த மார்க் ஆண்டனி படத்திற்கும் அப்படித்தான் செய்கிறார் என்று கூறுகிறார்.
இரண்டு பேரும் அவரவர் ஈகோவைல் இருக்கிறார்கள். நான் வேற ஆளை வைத்து படம் எடுத்துக் கொள்கிறேன் என்று இருவரும் போட்டி போட்டு கடைசியில் படமே டிராப் ஆகிவிட்டது.