செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தமிழ் வருட பிறப்புக்கு வெளியாகும் 8 படங்கள்.. லாரன்ஸ்க்கு போட்டியாக வரும் விஜய் ஆண்டனி

பொதுவாக சாதாரண நாட்களில் படங்கள் வெளியாவதை காட்டிலும் பண்டிகை நாட்களில் அதிக படங்கள் வெளியாகி வருகிறது. காரணம் விடுமுறை நாட்கள் என்பதை காட்டிலும் பண்டிகை நாட்களில் குடும்பமாக நேரத்தை செலவிட விரும்புவார்கள். இதில் முதல் தேர்வாக படம் பார்ப்பதாக தான் இருக்கும்.

ஆகையால் குடும்ப ஆடியன்சால் வசூல் அதிகரிக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை பண்டிகை நாட்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஏப்ரல் 14 வெள்ளிக்கிழமை தமிழ் வருடப்பிறப்பு வருகிறது. இதை முன்னிட்டு கிட்டத்தட்ட 8 படங்கள் ரிலீஸாக காத்திருக்கிறது.

Also read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

அந்த வகையில் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படமும் இதே நாளில் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் மும்மரமாக உள்ளார். மேலும் அருள்நிதி இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திருவின் குரல் படமும் இந்த படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also read: பிச்சைக்காரன்-2 படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜோடி போட்ட கும்தா நாயகி.. ஒரு ஹிட் படத்தால் கொட்டும் பட வாய்ப்புகள்!

மேலும் சொப்பன சுந்தரி, இரண்டில் ஒன்று பார்த்து விடு, யானை முகத்தான் போன்ற படங்களும் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. மேலும் சமந்தாவின் சாகுந்தலம் படமும் தமிழில் வருடப்பிறப்ப அன்று வெளியாகிறது. இவ்வாறு இந்த பண்டிகைக்கு கிட்டத்தட்ட எட்டு படங்கள் வெளியாவதால் எந்த படத்தை பார்ப்பது என்று ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் லாரன்ஸ், அருள்நிதி, விஜய் ஆண்டனி, சமந்தா போன்ற பிரபலங்களின் படங்கள் வெளியாவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எந்த படம் அதிக வேசூல் வேட்டையாடும் என்பது ஒரு வாரத்தில் தெரிந்து விடும். ஆகையால் ரசிகர்கள் ஏப்ரல் 14ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Also read: சமந்தாவை கேவலப்படுத்திய எல்.ஆர். ஈஸ்வரி.. இப்படியா பேசுவது என்ற கோபத்தில் ரசிகர்கள்

Trending News