வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

எலே எங்க ஓடவா பாக்குற.. அனல் பறக்கும் பிரச்சாரம், தலை காட்ட முடியாமல் தவிக்கும் வேட்பாளர்கள்

Election: தேர்தல் பிரச்சாரங்கள் தான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பிரபலங்கள் ஒரு பக்கம் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு வருகின்றனர்.

அதேபோல் கட்சித் தலைவர்களும் விடாது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்சாரம் கொஞ்சம் டல்லடித்து வருகிறது.

சொல்லப்போனால் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைவர்கள் எல்லாம் ஓட்டு கேட்கும் வேலையை முடித்து விடுகிறார்களாம். அதேபோல் 5 மணிக்கு பிறகு தான் அடுத்த கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

அனல் பறக்கும் தேர்தல் களம்

இதற்கு முக்கிய காரணம் வெயிலின் தாக்கம் தான். எப்போதுமே சித்திரை பிறந்ததும் தான் வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருடம் பங்குனி மாதமே உக்கிரமாக இருக்கிறது.

இதனால் வேட்பாளர்கள் தான் சொல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். காலை 7 மணிக்கே வெயில் ஆரம்பித்து விடுகிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணி தாண்டியும் வெக்கை தாங்க முடியவில்லை என புலம்பி வருகின்றனர்.

அதனால் தலைவர்கள் அனைவரும் பகல் நேரத்தில் நிர்வாகிகளுடன் சந்திப்பு, ஆலோசனை என மற்ற வேலைகளை பார்க்கின்றனர். மாலை நேரத்தில் தான் இவர்களுடைய முக்கிய பிரச்சாரங்கள் தொடங்குகிறது.

அந்த அளவுக்கு சூரிய பகவான் ரவுண்டு கட்டி வெளுத்து வருகிறார். இதை மீம்ஸ் கிரியேட்டர்களும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். இப்படியாக தேர்தல் களம் உண்மையிலேயே அனல் பறந்து கொண்டிருக்கிறது.

Trending News