வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பண பட்டுவாடா, கழுகு கண்களுடன் காத்திருக்கும் கட்சி.. 5 பேரை வைத்து போடும் தேர்தல் வியூகம்

Election 2024: தேர்தலுக்கு மிகக் குறுகிய நாட்கள் தான் இருக்கிறது. அதனாலேயே வேட்பாளர்கள் மக்களின் ஆதரவை திரட்ட கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் பாஜக தமிழகத்தில் வெற்றி கொடியை நாட்டி விட வேண்டும் என கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த முறையும் ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் வெற்றியடைய வேண்டும் என தீயாக உழைத்து வருகின்றனர்.

அதேபோல் தமிழகத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோர் வெற்றியடைய வேண்டும் என கடும் முயற்சி நடைபெற்று வருகிறது.

கழுகு கண்களோடு நோட்டமிடும் கட்சி

இதற்காக சில தேர்தல் வியூகங்களும் களம் இறக்கப்பட்டுள்ளது. அதன்படி எக்காரணம் கொண்டும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் செல்லக்கூடாது என்பதில் கட்சியினர் தீவிரமாக இருக்கிறார்கள்.

அதனாலேயே கழுகு கண்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு தொகுதியையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம். மேலும் எந்த வழியில் வாக்காளர்களுக்கு பணம் போகும் என்பதையும் தெரிந்து கொண்டு மேல் இடத்திற்கு தகவலும் சென்றிருக்கிறது.

ஏற்கனவே பறக்கும் படையினர் அனைத்து வண்டிகளையும் கேமராவுடன் சோதனை செய்து வருகின்றனர். இதில் ஆளும் கட்சியும் ஒரு பக்கம் கண்காணித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் தற்போது படு சூடாகி இருக்கிறது.

Trending News