இனி OTTக்கு ஆப்பு.. Youtube-ல் 2 மாஸ் படங்கள் ரிலீஸ்

OTT movies : தியேட்டரில் ஒரு காலத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆனாலே அவ்வளவு கூட்டம் இருக்கும். முதல் நாள் எப்படி இருக்கிறதோ அதே மாதிரி தான் கடைசி சோவிலும் கூட்டம் இருக்கும். ஆனால் இன்று அப்படி இல்லை இப்போது தான் ஓடிடி தளங்கள் நிறைந்திருக்கிறது.

தற்போது தியேட்டர்களில் படங்கள் பார்ப்பதை விட, மொபைலில் பார்க்கும் திரைப்படங்களையே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் யூடியூபில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகியது.

Dear Men :

கெய்த் ஹோம்ஸ் என்பவரால் இயக்கப்பட்டது டியர் மென் என்ற இந்த ஷார்ட் பிலிம் படம். சமூக உணர்வுகளை சுட்டிக்காட்டும் இந்த திரைப்படம் நேற்று( ஜூலை 30) youtube-ல் வெளியானது. மக்கள் விரும்புக்கு வகையில் இயக்கப்பட்டிருக்கிறது.

இது ஹிந்தியில் வெளியான ஷார்ட் பிலிம். பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. யூடுயூபில் இது ஒரு நல்ல ரீச்சாகும் என படக்குழு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு நல்ல ரீச் இருந்தால் நிச்சயம் தமிழில் டப்பிங் செய்யப்படும்.

Sitaare Zameen Par :

ஆர் எஸ் பிரசன்னா என்பவரால் ஹிந்தியில் இயக்கப்பட்டு வெளியிடப்பட்ட திரைப்படம் இது. கடந்த ஜூன் 20 திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருந்தது.

ஒரு படம் தியேட்டரில் வெளியானதற்கு பிறகு ஓடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவற்றில் தான் ரிலீஸ் ஆகும். ஆனால் இத்திரைப்படம் யூட்யூபில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.