பொதுவாகவே நடிகைகள் கொஞ்சம் சில படங்களில் நடித்து பிரபலமானதும் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் சில நடிகைகள் முன்னணி ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்று நினைத்து சினிமாவிற்குள் நடிக்க வருவார்கள். அப்படி அவர்கள் வந்து நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அவர்களுக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் அதன் பிறகு அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடுவார்கள். அப்படி நடித்த முதல் படமே ஹிட் கொடுத்த நடிகைகளை பற்றி பார்க்கலாம்.
கிரண்: இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இவர் மாடலிங்கில் மிக ஆர்வம் காட்டி இருந்தார். அப்படிப்பட்ட இவர் ஹிந்தியில் யாடின் என்ற படத்தில் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் சிறந்த புதுமுக நடிகை என்று விருதை பெற்றார். இவர் நடித்த முதல் படமே வெற்றி படமாக ஆனது.
ரீமாசென்: இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி 90ஸ் கிட்ஸ் மக்களின் மனதை கொள்ளை அடித்தார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.
கேத்தரின் தெரசா: இவர் தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் தமிழில் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி படமாக இவருக்கு அமைந்தது. இவருடைய நடிப்புக்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்தது.
சதா: இவர் தமிழில் ஜெயம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதே மாதிரி இவருக்கு ஜோடியாக நடித்த ஜெயம் ரவிக்கும் இதுதான் முதல் படம். இப்படி இவர்கள் இருவருமே நடித்த முதல் படமே மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
ரித்திகா மோகன் சிங்: இவர் கலப்பு தற்காப்பு கலைஞராக பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுகிறார். பின்னர் சுதா கொங்காரா இது சம்பந்தப்பட்ட ஒரு கதையை ரெடி பண்ணி மாதவனை நடிக்க வைக்கிறதுக்கு பிளான் செய்திருந்தார். இப்பொழுது இந்த கதைக்கு ஏற்ற மாதிரி ரியலாகவே இந்த கலை தெரிந்தவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரித்திகாவை நடிக்க வைத்தார். இதுதான் இவருக்கு முதல் படம். அந்த படம் தான் இறுதிச்சுற்று. இப்படம் குத்து சண்டை வீரருக்கு பயிற்சி அளிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி அடைந்தது.