ஐஸ்வர்யாராய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த 5 படங்கள்.. அஜித்துடன் ஜோடியாக நடிக்க மறுத்த படம்

தமிழில் ஐஸ்வர்யாராய் என்ற ஹீரோயினை அறிமுகப்படுத்தியது மணிரத்னம். பொதுவாகவே ஐஸ்வர்யாராய்க்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். கிட்டதட்ட ஐம்பது வயதை நெருங்கியும் தமிழ் சினிமாவில் இன்னும் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் நடித்து சக்கைப்போடு போட்ட 5 தமிழ் படங்கள்.

ஜீன்ஸ்: 1998 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் ஜீன்ஸ் . இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் பட்டையை கிளப்பியிருப்பார். மேலும் அவருக்கு இணையான ஜோடியாக பிரசாந்தும் சிறப்பாக நடித்திருப்பார். இந்தப்படம் சூப்பர் ஹிட்டாகி அவர்களுக்கு பெயரை வாங்கித் தந்தது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: காதலை மையமாக வைத்து எடுத்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, அஜித், தபு போன்றவர்கள் நடித்திருப்பார்கள். முதலில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ராய் நான் மெகாஸ்டார் மம்முட்டியுடன் தான் ஜோடி சேருவேன் என்று அஜித்தை நிராகரித்துவிட்டார்.

குரு: ஹிந்தியில் எடுத்த இந்த படம் தமிழில் தத்ரூபமாக டப்பிங் செய்யப்பட்டது . இந்த படத்தில் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்து, பெண்களின் மனதை வென்றார் ஐஸ்வர்யாராய்.

எந்திரன்: ஷங்கர் எடுத்த இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மிரட்டியிருப்பார் ஐஸ்வர்யா ராய். டான்ஸ், அக்டிங் என இதில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்: இந்த படத்தை இயக்கியவர் மணிரத்தினம். இந்தப் படத்தில் நடிப்பது ஐஸ்வர்யாராய்க்கு பள்ளிக்கூடம் செல்வது போன்று இருக்குமாம். மணிரத்தினம் தான் தனக்கு குரு என்று ஐஸ்வர்யா ராய் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

shankar

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். சினிமா ரசிகர்களுக்கு உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →