இந்த வார netflix-ல் கால் பதிக்கும்.. 5 த்ரில்லர் படங்கள்

OTT release : ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு புது திரைப்படம் அல்லது சீரிஸ் வெளியாகி ரசிகர்களை சுவாரஸ்யத்துடன் வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த வார netflix-ல் வெளியாகும் படங்கள் மற்றும் சீரிஸ் பற்றி பார்ப்போம்.

Thammudu..

ஜூலை 4, தெலுங்கில் வெளியான தம்முடு திரைப்படம் அனைத்து திரையரங்களிலும் வெளியானது. நிதின், லயா இருவரும் நடித்து ஹிட் கொடுத்தனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி netflix-ல் தம்டு திரைப்படம் வெளியாகவுள்ளது.

My Oxford year..

ஆங்கிலத்தில் வெளியான திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ் டப்பிங் நெட்பிலிக்சில் வெளியாகியுள்ளது. ஆங்கில படத்தை தமிழில் பார்க்க விரும்புபவர்களுக்கு இது ஒரு அரிதான வாய்ப்பாக இருக்கும்.

An homest life..

ஒரு இளைஞன் சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறான். திடீரென குற்ற சம்பவத்தில் மாட்டுகிறான். சமுதாயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் நம்பிக்கையின் தாக்கங்களை சுற்றி திரைப்படம் நகர்கிறது. இதுஒரு ஸ்வீடிஷ் திரில்லர் திரைப்படம் ஆகும். தற்போது தமிழில் ஓடிடி- இல் வெளியாகியுள்ளது.

The stone..

இந்த திரைப்படம் தாய்லாந்து மொழியில் வெளியான ஒரு த்ரிலர் திரைப்படம் ஆகும். இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் தற்போது ஓடிடி நெட்பிலிக்ஸில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இனி தமிழ் மக்களும் இந்த திரைப்படத்தை நெட்பிலிக்ஸில் கண்டு கழிக்கலாம்.

Glass heart..

ஜாப்பனீஸ் மொழியில் வெளியான இத்திரைப்படம் தற்போது நெட்பிலிக்ஸில் வெளியாக உள்ளது. ஒரு சாதாரண பாடலாசிரியராக இருப்பவரின் இசை கதையை நோக்கி நகர்கிறது. இந்த வார நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்த கிளாஸ் ஹார்ட் படத்தை ஓடிடி தளத்தில் கண்டு கழிக்கலாம்.