ஒரே படத்தோடு கும்மிடுபோட்டு போன 6 நடிகைகள்
சில நடிகைகள் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து தங்களது பெயரையும், மார்க்கெட்டையும் தக்க வைப்பார்கள். அந்த வகையில் சில நடிகைகள் நடிக்க ஆசைப்பட்டு கோலிவுட் பக்கம் வந்து ஒரே படத்துடன் மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு செல்வார்கள். அப்படி ஒன்னு, ரெண்டு படத்துடன் கோலிவுட்டை விட்டு போன 6 நடிகைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
பிரியங்கா சோப்ரா: பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்து வருகிறார். பிரபல ஹாலிவுட் பாப் பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்துக்கொண்ட பிரியங்கா சோப்ரா, உலக அழகி பட்டத்தையும் வென்றவர். இவர் உலக அழகி ஆனவுடன் முதன் முதலில் தமிழில் கமிட்டாகி நடித்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், தற்போது வரை தமிழ் பக்கம் வராமல் உள்ளார்.
ராதிகா ஆப்தே: பாலிவுட் நடிகையான இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். மேலும் தன் மனதில் பட்டத்தை மிகவும் வெளிப்படையாக பேசி அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார். இதனிடையே நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான அழகுராஜா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ரஜினியின் கபாலி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். இந்த இரண்டு படங்களுக்கு பின்பு வேறு எந்த தமிழ் படத்திலும் இவர் நடிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வித்யா பாலன்: கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர், பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரும் நடிகை எனலாம். இவர் தமிழில் அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். அப்படத்தில் அஜித்துக்கு ஏற்ற ஜோடி என ரசிகர்களால் புகழப்பட்டார். இருப்பினும் இப்படத்தை தொடர்ந்து வேறு எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட்டாகாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஜெயந்தி : மலையாள நடிகையான இவர் தமிழில் நடிகர் பிரபுவுடன் சேர்ந்து வண்ண தமிழ் பாட்டு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆறடி உயரம், பெரிய கண்கள், வசீகர முகம் என அனைத்து அம்சங்களையும் கொண்ட நடிகை வைஜெயந்தி ரசிகர்களை கொள்ளைகொண்டார். ஆனால் இப்படத்துடன் தமிழ் சினிமா பக்கமே வராமல் போய் விட்டார்.
சந்தியா: நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான யூத் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டார். மிகவும் ஸ்டைலிஷாக இப்படத்தில் நடித்த இவர், விஜய்யை இப்படம் முழுவதும் ஒருதலை காதலனாக தன் பின்னால் சுற்ற வைத்திருப்பார். இப்படத்தை தொடர்ந்து சில தமிழ் பட வாய்ப்புகள் வந்தும் அதனை நிராகரித்துவிட்டு அப்படியே காணாமல் போய் விட்டார்.
மானு: நடிகர் அஜித்தின் காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், திலோத்தமா கதாபாத்திரத்தில் ரசிகர்களை தன் வசம் ஈர்த்திருப்பார். அமைதியான முகம், படம் முழுவதும் சேலை கட்டி வலம் வரும் இவரது அழகு, வசீகரமான பூனை கண்கள் என இவர் அப்படத்தில் அஜித்தை தன் பின்னால் சுற்ற வைத்திருப்பார். ஆனால் இவரும் இப்படத்துடன் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் வேறு எந்த மொழி படத்திலும் கமிட்டாகாமல் அப்படியே போய்விட்டார்.
