மலையாளத்தில் வெளியான திரில்லர் படங்கள் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் டப்பில் வசீகரமாக மாறிய இவை, உணர்வும் சஸ்பென்சும் கலந்த சினிமா அனுபவத்தை தருகின்றன. அவற்றில் சில
Drishyam (மோகன்லால் – 2013 – திரில்லர்): மோகன்லால் நடித்த குடும்ப பின்னணியில் உருவான மிகச் சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். ஒரு சாதாரண மனிதன் சட்டத்தை தாண்டி செய்வதை நுட்பமாக எடுத்துள்ளது. இந்த திரைப்படம் Amazon Prime மற்றும் Disney+ Hotstar-இல் வெளியாகியுள்ளது.
Memories (பிருத்விராஜ்– 2013 – சஸ்பென்ஸ் திரில்லர்): பிரித்திராஜ் ஒரு மனவேதனையில் இருக்கும் போலீசாக, சீரியல் கொலை வழக்கை தீர்க்கிறார்.கதையின் ஒவ்வொரு கட்டமும் மன அழுத்தத்துடன் நகர்கிறது.
இந்த திரைப்படம் Netflix-இல் கிடைக்கிறது.
Charlie (துல்கர் சல்மான் – 2015 – காதல், பயணக் கதை): டுல்கர் சல்மான் நடித்த இந்த கலைமயமான காதல் படம், வாழ்க்கையை கொண்டாடும் நெஞ்சை நெகிழச் செய்யும் படைப்பு. ஒரு பெண், ஒரு மர்ம மனிதனைத் தேடும் அதிசயமான பயணமே இதன் மையம். இந்த திரைப்படம் Netflix-இல் கிடைக்கிறது.
Mumbai Police (பிருத்விராஜ் – 2013 – சைக்காலஜிக்கல் திரில்லர்): ஒரு போலீசாரின் நினைவிழப்பு மற்றும் அதற்குள்ளேயே பதிந்த மர்மம் அனைத்தையும் ஆராயும் படம். பிருத்விராஜ் இதில் சிக்கலான மற்றும் வலிமையான பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் Amazon Prime-இல் வெளியாகியுள்ளது.
Anjaam Pathiraa (குஞ்சாக்கோ போபன் – 2020 – சீரியல் கில்லர் திரில்லர்): மனோதத்துவ மர்மம் மற்றும் கொடூரக் கொலைகளை மையமாகக் கொண்ட திகில் திரைப்படம். குஞ்சாக்கோ போபன் பக்கவாடியாக செயல்படுகிறார். இந்த படம் Disney+ Hotstar-இல் கிடைக்கும்.
Lucifer (2019): மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இந்த படம் அரசியல், ஊழல்,வீரம் ஆகியவற்றின் கலவையாக நகர்கிறது.பெரும் வரவேற்பு பெற்ற பேஸ் மாஸ் கதையமைப்புடன் சூப்பர் ஹிட் ஆன படம். இந்த திரைப்படம் Netflix-இல் காண கிடைக்கிறது.
இந்த மலையாளத் திரில்லர்கள், தமிழ் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. நல்ல கதையும் நுணுக்கமான திரைக்கதையும்தான் இவற்றைச் சிறப்பாக்கும் காரணமாக அமைகிறது.