ஆக்ஷன் பிரியரா நீங்க.. அப்ப இந்த 8 போர் சம்பந்தப்பட்ட படங்கள மிஸ் பண்ணிடாதீங்க

Tamil Dubbed Action Movies: சிலருக்கு லவ் காமெடி படங்கள் பிடிக்கும். சிலருக்கு த்ரில்லர் ஹாரர் அமானுஷ்யமில் அதிக ஈடுபாடு இருக்கும். ஆனால் சிலருக்கு சண்டை படங்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்காக ஹாலிவுட்டில் ஆக்சன் போர் டிராமா சம்பந்தப்பட்ட பல படங்கள் வந்திருக்கிறது. அவை தமிழில் டப் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய 8 படங்களை பற்றி காண்போம்.

The Red Ghost : 2019 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி வீரர்களிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களை ஹீரோ காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.

ஆக்ஷன் பிரியரா நீங்க

Daving private Ryan : 1998இல் இப்படம் வெளிவந்தது. அமேசான் பிரைம் தளத்தில் ரசிகர்கள் இதை காணலாம். நான்கு ரியான் பிரதர்ஸ் இரண்டாம் உலகப்போரில் போராடுவார்கள். அவர்களில் மூன்று பேர் இறந்து விட நான்காவது நபரை காப்பாற்ற இறங்கும் குழு அதை செய்தார்களா என்பது தான் படத்தின் கதை.

Sniper the white Ravan : 2022 இல் வெளிவந்த இப்படம் இப்போது அமேசான் பிரைம் தளத்தில் இருக்கிறது. தன் மனைவியை கொலை செய்த ரஷ்ய படையை பழிவாங்க உக்கரின் ராணுவத்தில் சேரும் ஆசிரியரின் கதை தான் இப்படம்.

Lone survivor : 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் அமேசான் பிரைம் மற்றும் நெட் பிலிக்ஸ் தளத்தில் உள்ளது. அமெரிக்கா கப்பலை வீழ்த்திய தாலிபான் தலைவனை தேடி அமெரிக்கா வீரர்கள் செல்வார்கள். ஆப்கானில் அவர்களை கண்டுபிடிக்கும் அந்த தலைவன் என்ன செய்தார் என்பதுதான் கதை.

The hurt locker : 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அமேசான் பிரைமில் இருக்கிறது. ஈரான் நாட்டில் தீவிரவாதிகள் பொதுமக்கள் வாழும் இடத்தில் வெடிகுண்டு வைத்து விடுவார்கள். அதை கண்டுபிடித்து செயலிழக்க வைப்பது தான் படத்தின் கதை.

Brave heart : 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ஆடியன்ஸ் அமேசான் பிரைமில் காணலாம். இங்கிலாந்து அரசர் தன்னிடம் அடிமையாக இருக்கும் ஸ்காட்லாந்து மக்களை அதிக அளவில் துன்புறுத்துவார். அவரிடம் இருந்து மக்களை ஹீரோ காப்பாற்றி விடுதலை செய்வதுதான் படத்தின் கதை.

Panfilov’s 28 men : 2016 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. அமேசான் தளத்தில் இருக்கும் இப்படம் ரஷ்யா வீரர்கள் 28 பேர் தங்களை தாக்க வரும் ஜெர்மனி படை வீரர்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய கதைதான்.

Enemy at The gates : 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படமும் அமேசான் தளத்தில் இருக்கிறது. ரஷ்யா ஜெர்மனி போர் பற்றிய கதைதான் இப்படம். இதில் ஹீரோ முதல் முறையாக சண்டைக்கு வருவதும் அதன் பிறகு நடப்பதும் தான் படத்தின் கதை.