அஜித்துடன் ஜோடி போட்டு காணாமல் போன நடிகைகள்..

Ajith : அஜித் சினிமாவில் சைலன்டாக தனது சாதனையை புரிந்தவர். அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகள் எல்லாம் தற்போது பிரபலம் ஆகி விட்டனர். ஆனால் ஒரு சில நடிகைகள் இன்று வரை காணாமலே போய்விட்டனர்.

ரெட்:

இந்த திரைப்படத்தில் அஜித்தின் மொட்டை தலை மற்றும் குங்குமம் வைத்திருக்கும் ஸ்டைல் இவையெல்லாம் இளைஞர்களை அந்த சமயம் ஈர்த்தது. அஜித்துடன் ஜோடி போட்டு புதுமுக நடிகையான பிரியா கில் என்பவர் நடித்திருந்தார்.

தல அஜித்துக்கு அந்த திரைப்படத்தில் எவ்வளவு வரவேற்பு கிடைத்ததோ அதே மாதிரி தான் அந்த ஹீரோயினுக்கும் கிடைத்தது. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவர் சினிமா விட்டு விலகி விட்டார். இதை பற்றி தற்போதும் சினிமாவில் பேச்சு அடிபட்டு வருகிறது.

சிட்டிசன் :

அத்திப்பட்டி என்று இல்லாத கிராமத்தை வைத்து கதை நகருகிறது. அஜித் தனது இருமுகம் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்தில் நடிகை மீனாவும் இடம் பெற்று இருப்பார். அதேசமயம் நடிகை வசுந்தர தாஸுக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் அந்த ஹீரோயின் இப்போது சினிமாவில் காணாமல் போய்விட்டார்.

காதல் மன்னன் :

1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இளைஞர்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்தது. இந்த படத்தில் இருந்து ரசிகர்கள் கூட்டம் அஜித்துக்கு அதிகமானது. இதில் நடித்திருந்த நடிகை மானு அந்த ஒரு படத்துடன் தனது சினிமா வாழ்க்கையை முடித்தார்.

இந்த படத்தில் வரும் உன்னை பார்த்த பின்பு தான் பாடல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒன்றாகவும் இன்றளவும் இந்த பாடலுக்கு வயது குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்போது படம் ரீரிலீஸ் செய்தால் கூட வசூல் அள்ளும்.