உலகளவில் பிரபலமான கொரிய நடிகர் லீ ஜங்-ஜே, ‘ஸ்குவிட் கேம்’ தொடரின் பிளேயர் 456 சியோங் கி-ஹுன் கதாபாத்திரத்தில் நடித்தவர். அவரது நுட்பமான நடிப்பு, உலக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக நெட்பிளிக்ஸ் தொடர்களின் வரலாற்றில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக விளங்கியது இந்த தொடர்.
2021ம் ஆண்டு வெளியான ‘ஸ்குவிட் கேம்’ தொடரில், லீ ஜங்-ஜே கதையின் மையக் கேரக்டராக அசத்தியவர். 9 எபிசோடுகளை கொண்ட அந்த தொடரை ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கியிருந்தார். சமூக கட்டமைப்பில் மனிதர்களின் உண்மை முகங்களை வெளிக்கொணர்ந்த அந்தக் கதை பலரது மனதையும் புரட்டிப் போட்டது.
முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்தது போல, இரண்டாம் சீசன் 2024ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. அதில் புதிய கதாபாத்திரங்களும், புதுமையான திருப்பங்களும் இருந்தன. மீண்டும் லீ ஜங்-ஜே தனது இயல்பான நடிப்பால் மையமான பாத்திரமாக இருந்தார்.
மூன்றாவது சீசன் 2025ம் ஆண்டு கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாகியது. 6 எபிசோடுகளைக் கொண்ட இந்த சீசன் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் இதனை பற்றி விமர்சனம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில், லீ ஜங்-ஜே இந்திய ரசிகர்களுக்குச் சிறப்பு செய்தி கூறியுள்ளார். “வாய்ப்பு கிடைத்தால் பாலிவுட் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என அவர் உற்சாகமாக தெரிவித்தார். இது இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
லீ ஜங்-ஜேவின் நடிப்புத் திறமை, உலகமெங்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் இந்திய சினிமாவிலும் காலடி எடுக்க விரும்புவதாகக் கூறியது, ஒரு புதிய பயணத்தின் ஆரம்பமாகலாம். கொரியா-இந்தியா கலசமாக ஒரு கலைப்பெருவிழா உருவாகும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.