தியேட்டரில் பிளாப்.. ஆனா OTT ல் அதிக வியூஸ்களை தட்டி தூக்கிய 5 படங்கள்

ஒரு படம் தியேட்டரில் மிஸ் செய்தால்,அதை பார்ப்பதற்கு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது ஓடிடி தளங்களின் வளர்ச்சியால், ரிலீஸான 28 நாட்களுக்குள் ரசிகர்கள் நேரடியாக வீட்டில் வசதியாக பார்க்கும் நிலை வந்துவிட்டது. இந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் ஓர்மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை பார்க்கலாம்.

இந்த வாரம் அதிகம் வியூஸ் பெற்ற திரைப்பட பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்தி மற்றும் மலையாள படங்கள் பிடித்துள்ளன. முதலிடத்தில் பிருத்விராஜ் நடித்த சார் ஜமீன் உள்ளது, இது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி 48 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தில், ஹவுஸ்ஃபுல் 5 அக்‌ஷய் குமார் நடிப்பில் 37 லட்சம் வியூஸுடன் அமேசான் பிரைமில் களைகட்டுகிறது. மூன்றாவது இடத்தை, ஜியோ ஹாட்ஸ்டாரில் வந்துள்ள மலையாள திரைப்படமான ரோந்த் பிடித்துள்ளது. இப்படத்திற்கு 26 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது.

நான்காவது இடத்தில் தனுஷ் நடித்த குபேரா படம் இடம்பெற்றுள்ளது. பான் இந்தியா ரிலீஸாகி, தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய இப்படம், தற்போது ஓடிடியிலும் 20 லட்சம் பார்வைகளை அமேசான் பிரைமில் பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில், புதிதாக வெளியான தமிழ் படமான 3 பிஹெச்கே 12 லட்சம் பார்வைகளை பெற்று இடம் பிடித்துள்ளது.

அதிக வியூஸ்களை அள்ளிய டாப் 5 வெப் தொடர்

வெப் தொடர் பிரிவில், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ஸ்பெஷல் OPS சீசன் 2, 49 லட்சம் பார்வைகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து அமேசான் பிரைமில் வெளிவந்த ஹண்டர் சீசன் 2 – 36 லட்சம் வியூஸ், மற்றும் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆன மண்டலா மர்டர்ஸ் – 35 லட்சம் வியூஸ் பெற்றுள்ளன.

தி கிரேட் இந்தியன் கபில் ஷோ 20 லட்சம் வியூஸ் பெற்று நான்காம் இடத்திலும், மிட்டி எக் நயி பெஹ்சான் 16 லட்சம் வியூஸ் பெற்று ஐந்தாம் இடத்திலும் உள்ளன. மொழி கடந்தும் நல்ல உள்ளடக்கத்தையே தேடி பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை ஓடிடியில் அதிகரித்து வருகிறது.