OTT ரிலீஸ்: திரையரங்கிற்கு நேரமில்லை என்றாலும் கவலை வேண்டாம்; 28 நாட்களில் ஓடிடியில் படம் ரெடி. ஜூலை 7 முதல் 13 வரை அதிகம் பார்க்கப்பட்ட டாப் பட்டியலை ஓர்மேக்ஸ் வெளியிட்டுள்ளது அதை பார்க்கலாம்.
ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘குட் வைஃப்’ 6 மொழிகளில் ரிலீஸ். ஒரே வாரத்தில் 15 லட்சம் பார்வைகள் பெற்று 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
நாட்டை உலுக்கிய ராஜீவ் கொலை வழக்கை மையமாக கொண்ட தி ஹண்ட் சோனி லிவில் வெளியீட்டு… 17 லட்சம் பார்வைகளுடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. தி கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் 3 நெட்பிளிக்ஸில் 25 லட்சம் பார்வையுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்குவிட் கேம் சீசன் 3 நெட்பிளிக்ஸில் 30 லட்சம் வீட்ச் கவுண்ட்-ஐ கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை பஞ்சாயத் சீசன் 4 அடித்துக்கொண்டு, 42 லட்சம் வீட்ச் கவுண்ட்-ஐ கடந்து அமேசான் பிரைமில் கலக்குது.
கீர்த்தி சுரேஷ் நடித்த உப்பு கப்புரம்பு, அமேசான் பிரைமில் 20 லட்சம் நோக்குகளுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.அதே தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் 23 லட்சம் நோக்குகளுடன் 4வது இடம் வகிக்கிறது.
நெட்பிளிக்ஸில் வெளியாகிய ஆப் ஜெய்சா கொய், 24 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஹிந்தி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
முதலிடத்தில் தக் லைஃப்
ரெய்டு 2, நெட்பிளிக்ஸில் 31 லட்சம் நோக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. திரையரங்கில் தோல்வியடைந்த தக் லைஃப், ஓடிடியில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கட்டிப் பிடித்துள்ளது.33 லட்சம் நோக்குகளுடன் தக் லைஃப் இப்போ முதலிடத்தை பிடித்துள்ளது.