OTT : எந்த ஒரு புதிய படம் திரைக்கு வந்தாலும் அந்த படத்தை திரையில் பார்க்க தவறியவர்கள், ஓடிடி தளங்களில் எப்போது ரிலீஸாகும் என்று தான் எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள். அப்படி இந்த வாரம் ஹாட்ஸ்டாரரில் வெளியாகும் திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.
Black bag :
மார்ச் 14 அமெரிக்காவில் ஆங்கில மொழியில் வெளியான திரைப்படம் இது. இயக்குனர் ஸ்டீவன் ஸோடர்பெர்க் என்பவரால் இயக்கப்பட்டு கேட் பிளான்செட், மைக்கேல் ஃபாஸ்பெண்டர், ரெஜ்-ஜீன் பேஜ், போன்றவர்களின் நடிப்பால் திரையரங்குகளில் கலக்கிய படம். இந்த வார ஹாட்ஸ்டாரில் கலக்க வருகிறது.
Night Bitch :
காமெடி திரில்லர் திரைப்படமாக 2024-ல் அமெரிக்காவில் வெளியான திரைப்படம். இந்த படத்திற்கு அந்த நாட்டில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அமரிக்காவில் ஹுலு வலைத்தளத்தில் இத்திரைப்படம் வெளியானது. இந்தியாவில் இந்த வார ஹாட்ஸ்டாரில் படம் வெளியாக போகிறது.
A bloody lucky day :
இது ஒரு அசத்தலான கொரியன் திரைப்படம். பொதுவாகவே தமிழ்நாட்டில் நிறைய கொரியன் பட காதலர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாவது தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Super sara :
சூப்பர் சாரா என்பது ஸ்பானிஸ் தொடராகும். அதாவது, sஸ்பெயினில் ஒரு புகழ்பெற்ற நடிகையான சாரா மொன்டயில் என்பவரை பற்றி எடுக்கப்பட்ட உண்மை தொடராகும். தற்போது இந்தியாவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
Hurricane Katrina Race Against Time :
இந்த தொடரில் கிட்டத்தட்ட 5 எபிசோட் இருக்கிறது. அரசியல், மனிதர்கள் செய்யும் அட்டூழியம் போன்றவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இந்த வார ஹாட்ஸ்டர் ஓடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வார தொடரை நாம் கண்டு மகிழலாம்.