புதன்கிழமை, ஜனவரி 22, 2025

‘எப்போ வரீங்க’ மைனா படத்தில் கணவனை டார்ச்சல் செய்த நடிகை.. இப்போ என்ன பண்றங்க தெரியுமா?

மைனா படத்தில் தனது போலீஸ் கணவனை டார்ச்சல் செய்யும் சூசனை ஞாபகம் இருக்கா..? இன்றளவும், ‘அதெல்லாம், தெரியாது எப்போ வரீங்க..எப்போ வரீங்க’ என்று ட்ரோல் விடீயோக்களில் தினமும் வளம் வருகிறார். ஆரம்பத்தில் நிறைய படங்களில், துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், சமீப காலமாக ஆள் அட்ரஸ் இல்லமல் இருக்கிறார்.

இவரை பற்றி நெட்டிசன்களும் தேட ஆரம்பித்து விட்டனர். சீரியல்களில் வில்லி நடிகையாக பிரபலமான நடிகை சூசன். தனது தனித்துவமான நடிப்பால் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை சூசன். விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பான சுழியம் தொடரின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார் சூசன். அதனை தொடர்ந்து தென்றல், ஆபிஸ் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தனது வில்லத்தனமான நடிப்புக்கு பெயர் போன நடிகை சூசன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவினார். ராட்சசன் படத்தில், இவரது அசாதாரண நடிப்பு, மக்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும்போது, எழுந்து போயி அடித்து விடலாமா என்று தோன்றும். அந்த அளவிற்கு, சிறப்பான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ராட்சசன் படம் மட்டும் அல்ல.. அவர் நர்த்தகி, பேசியக்கா மருமகன், ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார். திறமையிருந்து அவரால் வெள்ளித்திரையில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்க முடியவில்லை.இந்த நிலையில், மைனா பட பிரபலம் சூசன் என்ன ஆனார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இப்படி பட்ட சூழ்நிலையில், தற்போது, அவரது போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. குடும்பம், கணவர் என செட்டில் ஆகிவிட்ட நடிகை சூசன் மகனுடன் இருக்கும் புகைப்படம் அதிக கவனத்தை பெற்று வருகிறது.. நடிகை சூசனுக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். திடீரென்று இவர் சினிமாவில் இருந்து விலகியது எதனால் என்ற கேள்வியும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Trending News