வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

என்னென்ன சொல்றான் பாருங்க.. கோபி, சுதாகர் ஒதுக்கிய விவகாரத்தில் பயங்கரமாக உருட்டிய ஈரோடு மகேஷ்

Parithabangal Gopi – Sudhakar: அரசியல், சினிமா, அன்றாட வாழ்வின் எதார்த்தங்கள் என அத்தனையையும் தங்களுடைய வீடியோக்களின் மூலம் ரசிகர்களுக்கு நகைச்சுவை கலந்த சமூக சிந்தனையுடன் கொடுக்கும் யூட்டியூபர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இன்றைய முன்னணி யூட்டியூப் சேனல்களில் இவர்களுடைய பரிதாபங்கள் சேனலும் முக்கியமான ஒன்று. இந்த சேனல் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வைகை புயல் வடிவேலுவின் மீம்ஸ்களை அடுத்து கோபி சுதாகரின் மீம்ஸ்கள் தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. இவர்கள் பேசும் கன்டென்ட் மற்றும் இவர்களுடைய கவுண்டர்கள் நெட்டிசன்களிடையே மிக பிரபலமான ஒன்று. இவர்களுடைய வீடியோக்கள் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் வரை சென்றடைந்து இருக்கிறது.

Also Read: திறமை முக்கியமில்லை, டிஆர்பி தான் முக்கியம்.. விஜய் டிவி என் வாழ்க்கையே அழிச்சுட்டாங்க புலம்பும் பிரபலம்

கோபி மற்றும் சுதாகரின் வளர்ச்சி எந்த அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது அதே அளவுக்கு சிக்கல்களை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவிக்கு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணம் கோபி மற்றும் சுதாகர் இருவரும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிசனில் கலந்து கொண்டு ரிஜெக்ட் செய்யப்பட்டவர்கள். இவ்வளவு திறமை இருப்பவர்களை எப்படி ரிஜெக்ட் செய்தார்கள் என்று இந்த சேனலை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இது பற்றி சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளர் மற்றும் நடுவராக இருக்கும் ஈரோடு மகேஷிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த ஈரோடு மகேஷ், அவர்கள் இருவருக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, அவர்களை ரிஜெக்ட் செய்யுங்கள் என்றும் நான் சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது என்னால் தான் அவர்கள் வெளியே சென்று விட்டார்கள் என்று சொல்வது ரொம்பவும் தவறு என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

மேலும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட குரேஷி, பாலா, புகழ் போன்றவர்களுக்காக நான் விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் மேல் அதிகாரிகளிடமே பேசி வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதிலை சொல்லி உருட்டினார். ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களாக வருபவர்கள் மீது நேயர்களுக்கு ஒரு பெரிய அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

விஜய் தொலைக்காட்சிக்கு இது ஒன்றும் புதிதல்ல. இவர்களிடம் ஆடிசன் வந்து தோற்ற நிறைய பேர் நிஜ வாழ்க்கையில் ஜெயித்திருக்கிறார்கள். நடன நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாய்பல்லவி இன்று முன்னணி நடிகையாக இருக்கிறார். அதே போன்று தான் ஜெய்பீம் பட நடிகர் மணிகண்டனும். இதை அவரே விஜய் டிவி மேடையில் சிறப்பு விருந்தினராக வந்தபோது சொல்லி சேனலை பயங்கரமாக மொக்கை பண்ணி இருந்தார். இப்படி விஜய் டிவி மிஸ் செய்த எத்தனையோ திறமையாளர்கள் இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Also Read:விறுவிறுப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 ஆடிஷன்.. யாரு கலந்துக்குறாங்க, எப்ப துவங்கப்படுகிறது தெரியுமா.?

Trending News