விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகள் குடும்பத்தை பொறுப்புடன் பார்த்தால் மட்டும் போதாது, அதற்குமேல் பொருளாதாரத்திலும் ஏதாவது ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பு இருந்தால் மட்டுமே வீட்டில் இருப்பவர்கள் மதிப்பார்கள் என எண்ணி பாக்யா தன்னுடைய மாமியார் பெயரில் ஈஸ்வரி மசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்தை துவங்கி அதில் சமையல் ஆர்டர்களை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறாள்.
இதனால் ராதிகாவும் தன்னுடைய மகள் பிறந்தநாள் அன்று அனாதை குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்க விரும்பி, பாக்யாவிடம் சமையல் ஆர்டரை கொடுத்து, அதனை அந்த ஆசிரமத்தில் இருக்கும் ராதிகா கொடுத்துவிடுகிறாள்.
எதிர்பாராதவிதமாக அந்த சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழ, போலீசார் மற்றும் ஊடகத்திற்கு இந்த விஷயத்தை பெரிதாக்கி பெரிதும் பரபரப்பாக ஏற்படுத்தி விட்டனர்.
இதன் பிறகு ராதிகாவை விசாரித்த போலீசார், அவர் மீது வழக்கும் போட்டது. இதற்கெல்லாம் ஈஸ்வரி மசாலா நிறுவனம் மட்டுமே காரணம் என போலிசாரிடம் கோபி தெரிவித்தான்.
எப்படி குழந்தைகள் மயங்கி விழுந்தனர் என பாக்யா குடும்பமே தலையை பிடித்துக் கொண்டிருக்கிறது. இதை அறிந்த எழில் எப்படி இது நடந்தது என துப்பு துலக்கி அதை கண்டுபிடித்து விடப் போகிறான்.
ஆனால் இது கோபி உடைய வேலையாகவும் இருக்கலாம். ஏனென்றால் இப்படி ஏதாவது செய்தால்தான் பாக்யா மற்றும் ராதிகா இருவருடைய நட்பையும் நிரந்தரமாக பிரிக்க முடியும் என நினைத்து இப்படி ஒரு வேலையை செய்திருக்கலாம்.