Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அமிர்தாவை ஈஸ்வரி வார்த்தையால் நோகடித்ததால் கோவப்பட்ட எழில் பாட்டியிடம் பேசி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் ஈஸ்வரி கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொடர்ந்து எழில் மற்றும் அமிர்தாவை காயப்படுத்தும் அளவிற்கு தேள் போல கொட்டுகிறார்.
ஆனாலும் பொறுமையாக பேசிக் கொண்டிருக்கும் எழிலை சீண்டிப் பார்க்கும் விதமாக அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் பற்றி பேசி அவன் வந்து கூப்பிட்டால் உன் பொண்டாட்டி அனுப்பி வச்சு விடுவியா என்று மட்டமான கேள்வியை கேட்கிறார். அத்துடன் நீயும் உன் பொண்டாட்டி நிலா எல்லாரும் சொகுசாக இந்த வீட்டில் இருந்து மூன்று நேரமும் சாப்பிட்டு இருப்பதற்கு உன்னுடைய பங்கு ஏதாவது இதுவரை பணம் கொடுத்து இருக்கிறாயா?
கண்ட்ரோலை மீறி ஆவேசத்தில் உண்மையை போட்டு உடைத்த எழில்
கொஞ்சம் கூட அதைப்பற்றி யோசிக்காமல் சினிமாவில் சாதிக்க போறேன் என்று தினமும் ஊற சுத்திக்கிட்டு வருகிறாய். இதில் உங்களுடைய வாழ்க்கைக்கு ஒரு பிடிமானமாக குழந்தை பிறக்க வேண்டும் என்று சொன்னால் என்னை ஏதோ குற்றவாளி மாதிரி பாக்குறீங்க. என்னுடைய அனுபவத்தில் சில விஷயங்களை நான் சொல்ல தான் செய்வேன்.
அதைக் கேட்டு தான் நீ நடந்து கொள்ளணும் என்று ஓவர் அராஜகம் பண்ணும் வகையில் ஈஸ்வரி தொடர்ந்து எழிலை காயப்படுத்தி பேசுகிறார். பிறகு அங்கே இருப்பவர்கள் எழில் மற்றும் அமிர்தாவை உள்ளே கூட்டிப் போவதற்கு முயற்சி எடுக்கிறார்கள். அப்பொழுது கூட ஈஸ்வரி அவர்களை விடாமல் அமிர்தா ஒரு ராசி இல்லாதவள் என்று கூறி எழிலை அதிகமாக கோபப்படுத்தி விட்டார்.
இதைக் கேட்ட எழில், ஈஸ்வரியை பார்த்து பாட்டி நீங்க பேசுவது எதுவுமே சரி இல்லை, அமிர்தாவை பற்றி ரொம்பவே தவறாக பேசுகிறீர்கள். உங்களை எதிர்த்து உங்களுக்கு பிடிக்காமல் நாங்கள் கல்யாணம் பண்ணியதால் அப்போதிலிருந்து இப்போது வரை மொத்த கோபத்தையும் காட்டுகிறீர்கள். நானும் பல தடவை பொறுத்து போய் அமைதியாக இருக்கிறேன். என் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு ரொம்பவே என்ன சோதித்து பாக்காதீங்க என்று பதில் பேசுகிறார்.
அப்பொழுது ஈஸ்வரி, நான் அப்படித்தான் பேசுவேன் அமிர்தா ராசி இல்லாதவள் தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அத்துடன் உனக்கு சான்ஸ் கிடைக்காமல் போவதற்கும் இவளுடைய ராசி தான் காரணம் என்று சொல்கிறார். இதை கேட்டு கோபப்பட்ட எழில், எனக்கு சான்ஸ் கிடைக்காமல் போனதற்கு காரணம் அமிர்தா இல்லை. நீங்கதான் பாட்டி என்று சொல்கிறார்.
இதை கேட்டது ஈஸ்வரி நான் என்ன பண்ணினேன் என்று கேட்கும் பொழுது நீங்க உங்க மகனால ஜெயிலுக்கு போனீங்கல்ல, அப்பொழுது நான் கோர்ட்டு கேஸ் என்று அலைந்தபொழுது என்னால் கதை சொன்ன தயாரிப்பாளரை சரியான நேரத்தில் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே நான் அவரிடம் கதை சொல்லி வைத்திருந்தேன். அவரும் கதை நன்றாக பிடித்து இருக்கிறது என்று சொல்லி சில கரெக்ஷன் மட்டும் சொல்லி இருந்தார்.
அந்த கரெக்ஷனை சரி பண்ணி நான் கொண்டு போகும் நேரத்தில் தான் உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் உங்க மேல் இருக்கும் பாசத்தினால் சினிமாவை நான் யோசிக்காமல் உங்களுக்காக கோர்ட்டு கேஸ் என்று அலைந்தேன். இதற்கு காரணம் நீங்களும் உங்க மகனும் தான். உங்க மகனை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பி ஏமாந்து போனதால் என்னுடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது என்ற உண்மையை எழில் போட்டு உடைத்து விட்டார்.
இதைக் கேட்டும் திருந்தாத ஈஸ்வரி, சும்மா என்ன காரணம் சொல்லாத என்று அமிர்தாவை குறை சொல்ல ஆரம்பித்தார். பிறகு வெளியிலே போய் இருந்து பார்த்தால் தான் மூன்று நேர சாப்பாட்டுக்கு எந்த அளவுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று தெரியும் என்று ஈஸ்வரி மட்டம் தட்டி பேச ஆரம்பித்து விட்டார். இதைக் கேட்டு பொறுக்க முடியாத பாக்கியா, அமிதாவை கூட்டிட்டு வெளியே போ என்று முடிவு எடுத்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- ஈஸ்வரி இடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் பாக்யா மருமகள்
- பாக்கியாவிற்கு அடுத்து அமிர்தாவை டார்ச்சர் பண்ணும் ஈஸ்வரி
- பாக்கியாவின் ஹோட்டலுக்கு ஆப்பு வைக்கும் கோபி