திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கோபியை பற்றி உண்மையை அறிந்த 3வது நபர்.. சின்னாபின்னமான பாக்கியலட்சுமி குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தற்போது அதிரடி திருப்பங்கள் பாக்யலக்ஷ்மி தொடரில் அரங்கேறி உள்ளது. அதாவது ராதிகாவுடன் தான் கோபி பழகி வருகிறார் என்ற உண்மை எழிலுக்கு தெரிந்துள்ளது.

மேலும் ராதிகாவின் கணவர் ராஜேஷ் கோபி வீட்டுக்கு வந்து எல்லோர் முன்னாலும் தன் மனைவியுடன் கோபி பழகி வருவதை கூறியதால் தற்போது ஈஸ்வரிக்கும் சந்தேகம் அதிகமாகியுள்ளது. இதனால் கோபியின் தந்தைக்கும், எழிலுக்கும் முன்கூட்டியே ஏதோ உண்மை தெரிந்தது என்ற சந்தேகத்தில் ஈஸ்வரி உள்ளார்.

ஆனால் எழில் அப்படி எதுவும் இல்லை என ஈஸ்வரியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் அப்போது ஆத்திரம் தாங்க முடியாமல் கோபியின் தந்தை ராமமூர்த்தி உன் பையன் ஒன்னும் அவ்வளவு யோக்கியம் இல்லை என உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் ஈஸ்வரி நிலைகுலைந்து போகிறார்.

உடனே இனியா அழுதுகொண்டே அம்மாவைக் கூட்டி வருகிறேன் என போகிறாள். மேலும் ஈஸ்வரி கோபிக்கு போன் செய்து உடனே வீட்டுக்கு வா உன்னைப்பற்றி எல்லாரும் ஏதேதோ சொல்கிறார்கள் என கதறி அழுகிறாள். இதனால் கோபி செய்வதறியாமல் மிகுந்த குழப்பத்தில் உள்ளார்.

ஒரு பக்கம் ராதிகா என் மூஞ்சிலேயே முழிக்காத என கோபியை விரட்டி விட்டுள்ளார். மறுபக்கம் தனது சொந்த குடும்பத்திற்கும் உண்மை தெரிந்ததால் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த குழப்பத்தில் காரை ஓட்டிச் செல்கிறார் கோபி. இவ்வாறு பாக்யலட்சுமி தொடர் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

மேலும் கோபி பதட்டத்தில் காரை ஓட்டிச் செல்லும்போது ஆக்சிடென்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஈஸ்வரி கோபியின் மீது கண்டிப்பாக இரக்கபடுவார். மேலும் ராதிகாவுக்கும் கோபி மீது அனுதாபம் வர அதிக வாய்ப்புள்ளது. இதனால் உச்ச கட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி தொடர் வர உள்ளது.

Trending News