புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எல்லாருமே அரைகுறை நாய்ங்க.. அசிங்கப்படுத்தியதால் கொந்தளித்த எதிர்நீச்சல் குணசேகரன்

இயக்குனர் மாரிமுத்து என்று சொன்னால் ரசிகர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் எதிர்நீச்சல் குணசேகரன் என்று சொன்னால் சட்டென்று ஞாபகம் வரும். அந்த அளவுக்கு எதிர்நீச்சலில் குணசேகரன் கதாபாத்திரத்துடன் ஒன்றிபோய் உள்ளார் மாரிமுத்து. இப்போது சின்னத்திரை தொடர்களிலேயே நம்பர் ஒன் டிஆர்பியில் எதிர்நீச்சல் உள்ளது.

ஆனால் இந்த தொடரில் உள்ள பிரபலங்களை தனியார் ஊடகங்கள் பேட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் பேட்டியிலும் தரமான சம்பவங்களை செய்து வருகிறார் எதிர்நீச்சல் குணசேகரன். அதாவது சமீபத்தில் மாரிமுத்துவின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பெண் இவரின் கைப்பேசி என்னை கேட்டிருந்தார். பொதுவாக பிரபலங்கள் ஒரு பொது வழியில் தங்களது கைபேசி எண்ணை கொடுக்க மாட்டார்கள்.

Also Read : டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்த டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தை காட்டும் எதிர்நீச்சல்

ஏனென்றால் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து தொந்தரவு வரும் என்பதால் தவிர்த்து விடுவார்கள். ஆனால் மாரிமுத்து உடனே தனது கைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். இதைப் பேட்டியாளர் வேறு யாராவது ஹேக் செய்து மொபைல் நம்பரை பதிவிட்டார்களா என்று கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்று மாரிமுத்து கூறினார்.

அதை நான் தான் கொடுத்தேன், அதுவும் ஒரு பெண் கைபேசி நம்பர் கேட்டால் கொடுப்பதில் என்ன தவறு என்று வேடிக்கையாக பேசி இருந்தார். மேலும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் வில்லத்தனத்திற்கு சில ட்ரிக்குகளை பயன்படுத்திவார். அதாவது பேசிக் கொண்டும் இருக்கும்போதே செறும்புவார்.

Also Read : எதிர்நீச்சலின் 500-வது எபிசோட் இப்படித்தான் இருக்கும்.. கிளைமாக்ஸ் ரகசியத்தை போட்டு உடைத்து திருச்செல்வம்

இது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குணசேகரனை பூமர் அங்கிள் என்று ரசிகர்கள் வச்சு செய்து வருகிறார்கள். இதுகுறித்து குணசேகரன் பேசுகையில், அதாவது நான் கடவுள் நம்பிக்கை அற்றவன், கோயிலுக்குப் போக மாட்டேன், எண்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டேன், எப்போதுமே 20 வருடங்கள் பிறகு என்ன நடக்கும் என்று முற்போக்கு சிந்தனை உடன் யோசிக்க கூடியவன்.

அப்படி என்னை பூமர் அங்கிள் என்று சொல்பவர்கள் அரைகுறை நாய்கள், இவர்களுக்கு எல்லாம் அப்படி தான் தெரியும். அதுமட்டுமின்றி நான் ஜப்பானில் பொறக்க வேண்டியவர், தெரியாம தமிழ்நாட்டில் பிறந்து விட்டேன் என பேசினார். தன்னை ரசிகர்கள் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் கோபத்தில் அவர்களைக் கண்டபடி திட்டியதும் ரசிகர்களுக்கு வேடிக்கையாக தான் தெரிகிறது.

Also Read : மானத்தை வாங்க சந்தர்ப்பம் பார்க்கும் ஜான்சி ராணி.. அடி மேல் அடி வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன் 

Trending News