மும்மூர்த்திகளாக சுற்றி வந்த குணசேகரன், ஞானம், கதிர் மூவரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானம் ஒரு பக்கம் நீலி கண்ணீர் விட்டு விசாலாட்சியையும், சக்தியையும் தன் பக்கம் இழுக்க போராடி வருகிறார்.
கதிர், ஞானம் இருவருக்கும் இடையே சொத்துக்களை அபகரிக்கும் எண்ணமே அதிக அளவில் இருக்கிறது. ஆனால் குணசேகரன் முழுவதுமாய் நம்புவது கதிரை தான். ஒரு பக்கம் தனக்குண்டான பங்குகளை எப்படியாவது அடைய வேண்டும் என துடிக்கிறார் ஞானம்.
இதற்கிடையில் ஆடிட்டர் மற்றும் வக்கீலுடன் சிறையில் அண்ணனை பார்க்க சென்ற கதிர், நீங்கள் எனக்கு அண்ணன் மட்டும் இல்லை, என்னுடைய அப்பா என குணசேகரின் நம்பிக்கை முழுவதும் பெறுகிறார். அப்படியே சூழ்ச்சி சக்கரத்தையும் உருட்டி விடுகிறார்.
கதிர், குணசேகரன் இடம் நீங்கள் வரும் வரை சொத்துக்களை என் பெயரில் எழுதிக் கொடுங்கள் என தான் முன்பே ரெடி பண்ணிய பத்திரத்தை நீட்டுகிறார். நீதான் எனது அடுத்த வாரிசு என கையெழுத்து போட்டு தம்பி பின்னிய வலையில் வசமாய் சிக்கிக் கொண்டார் குணசேகரன்.
கதிரின் மாமனார் நந்தினியின் அப்பா ஏற்கனவே கதிரிடம் அடுத்த குணசேகரனாக நீ மாற வேண்டும் என கூறி மனதை மாற்றி வைத்துள்ளார். இப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்துதான் அந்த குடும்பத்தை ஆட்டிப்படைக்க போகிறார்கள். மொத்த சொத்தும் கதிர் பெயரில் மாறிவிட்டது. குணசேகரனைப் போல் மினுக்குடன் வெள்ள வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் வந்து நிற்கிறார்.