
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் ஒரு கிரிமினல் என்றால் குணசேகரனையே ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு கதிர் அராஜகத்தின் உச்சகட்டத்திற்கு போய்விட்டார். அந்த வகையில் குணசேகரன் நம்பி கொடுத்த சொத்தை ஆட்டையை போடும் வகையில் மொத்தமாக கதிர் ஏமாற்றி விட்டார். தற்போது இவங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அறிவுக்கரசி அட்டூழியம் பண்ணி வருகிறார்.
அந்த வகையில் தர்ஷன் காதல் விஷயம் தெரிந்த உடன் பார்க்கவி மற்றும் அவருடைய அப்பாவை டார்கெட் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பித்தார். அத்துடன் வீட்டை விட்டு போன நான்கு பெண்களும் சொந்தக் காலில் நின்னு ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று கனவோடு இருப்பவர்களுக்கு செக் வைக்கும் விதமாக அவர்களுடைய வீட்டு ஓனரை மிரட்டி வீட்டை காலி பண்ண வைத்து விட்டார்.
இன்னொரு பக்கம் நந்தினிக்கு கிடைத்த பிசினஸையும் கெடுத்து விட்டார். பல இடங்களில் யாருக்கும் தெரியாமல் அறிவுக்கரசி கமுக்கமாக இருந்து தில்லாலங்கடி வேலை பார்த்து வருகிறார். ஆனால் சக்திக்கு மட்டும் அறிவுக்கரசியின் செயல்கள் எதுவும் பிடிக்காததால் குணசேகரன் இடம் எல்லா விஷயத்திலும் இந்த அறிவுக்கரசி நுழைய வேண்டாம். அந்தப் பொண்ணு பார்க்கவியையும் அவங்க அப்பாவையும் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று சொல்லிடுங்க.
அதே மாதிரி கல்யாணம் உங்க கௌரவமாக தான் நடக்க வேண்டும், நம்ம வீட்டு முறைப்படி எல்லா விஷயத்தையும் நாம் முன் நின்று நடத்த வேண்டும். அதுலயும் நாட்டாமை பண்ண வேண்டாம் என்று குணசேகரன் இடம் தெளிவாக சக்தி கூறிவிட்டார். ஆனாலும் எதற்கும் அசராத அறிவுக்கரசி, அன்புகரசியை குணசேகரன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து கல்யாணம் முடியும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம் என்று புதுசாக ஒரு டிராமாவை போட ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் அறிவுக்கரசி என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மையாக கதிர் ஆடி வருகிறார். இவர்களைப் பற்றி தெரியாமல் குணசேகரன் ஏமாந்து கடைசியில் தோற்றுப் போய் நிற்கப் போகிறார். கல்யாணமும் நடக்கப் போவதில்லை, சொத்தும் கையை விட்டுப் போகப் போகிறது. இந்த இரண்டு விஷயமும் நடந்த பிறகு தான் குணசேகருக்கு வாழ்க்கை பற்றிய அனுபவமே கிடைக்கப் போகிறது.
அடுத்ததாக ஜனனியை பார்த்து சக்தி ஒரு டெக்கரேஷன் வேலையில் நான் பார்ட்னராக சேர்ந்திருக்கிறேன் என்று சொல்கிறார். இதற்கு சந்தோஷப்பட்ட ஜனனி யார் என்று கேட்கும் பொழுது அது குந்தவை தான் என்ற உண்மையை சக்தி மறைத்து விடுகிறார். அந்த வகையில் ஜனனிடம் மறைக்கும் அளவிற்கு சக்தி ஏன் பொய் சொல்ல வேண்டும், சக்தியிடம் உனக்கு ஒரு சிறந்த தோழியாக தான் இருப்பேன் என்று குந்தவை கூறியதை ஜனனிடம் சொல்லி இருந்தால் ஜனனியே நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார். அதை விட்டுவிட்டு சக்தி பொய் சொல்லி மறைத்து வருகிறார்.