Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனின் பிளான் சக்தி மூலமாக நிறைவேறிவிட்டது. அதாவது குணசேகரன் சகஜமாக அந்த வீட்டிற்கு திரும்ப போக வேண்டும் என்றால் அதற்கு வீட்டில் இருக்கும் நான்கு பெண்கள் சம்மதித்தால் மட்டும் தான் முடியும் என்பது தான் நிதர்சனம். ஆனால் அந்தப் பெண்களிடம் யாரு பேசினாலும் வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்ட குணசேகரன், சக்தியை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டார்.
சக்தியும் ஏதோ தன் பக்கத்தில் இருந்து நல்லது செய்ய வேண்டும், நியாயம் எதுவென்று எனக்குத் தெரியும் என்ற அர்த்தத்தில் குணசேகரன் கட்டி காத்த வீட்டிற்குள் ஏன் அவரை வரவிடாமல் தடுக்க வேண்டும். அவர் பரோலில் வெளியே வருவதற்கு அனுமதித்த நீங்கள் வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பது ஏன் என்ற கேள்வி கேட்டு நான்கு பெண்களையும் மடக்கி விட்டார்.
அந்த வகையில் நான்கு பெண்களும் சேர்ந்து சாறுபாலாவிடம் குணசேகரன் வீட்டிற்கு வரலாம் என்று நோ ஆப்ஜெக்ஷன் லெட்டர் கொடுக்க சொல்லி விட்டார்கள். அதன்படி குணசேகரன் வீட்டிற்கு வந்து விடுவார். ஆனால் இதற்கிடையில் கதிர், எதற்காக அண்ணன் சக்தியை வரவழைத்து பேச வேண்டும். சக்தி ஏன் குணசேகரனுக்காக நாட்டாமை பண்ண வேண்டும் என்ற கேள்விக்கு மாமனார் கொடுத்த விடை தான் எது எப்படியோ நீங்கள் போய் ஒரு டிராமா போட்டு உங்க அண்ணனை கவுத்து விடுங்கள் என்று சொன்னார்.
அதன்படி கதிர் நேரடியாக கோவிலுக்கு சென்று குணசேகரனிடம் நீலி கண்ணீர் வடித்து டிராமா பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். ஆனால் குணசேகரன் வீட்டுக்குள் போக வேண்டும் என்றால் ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்பதால் அனைவரும் வெளியே இருக்கிறார்கள். இதற்கு இடையில் எப்படியாவது குணசேகரன் மூலம் பிரச்சனையை உண்டாக்கி மறுபடியும் அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று கதிர், மாமனார் உடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்.
அந்த வகையில் கதிர் போட்ட பிளான் தெரியாமல் குணசேகரும் முட்டாளாக நம்பிக் கொண்டு வருகிறார். இதனால் கதிர் செய்யும் சதியில் குணசேகரன் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்கு போவாரா அல்லது கதிரின் முகத்திரையை கிழித்து சக்தி தொங்கவிடுவாரா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் சக்தி தற்போது குணசேகருக்கு சப்போர்ட்டாக பேசுவதற்கு முக்கிய காரணம் அண்ணன் வீட்டிற்கு வந்தால் தான் கதிர் செய்யும் அட்டூழியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.
அதன் மூலம் குணசேகரனுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் கதிருக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்பதால் கதிர் முகத்தில் கரியை பூசுவதற்கு சக்தி போராடுகிறார். அதே நேரத்தில் சக்தியின் மாற்றம் பெண்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அத்துடன் குணசேகரன் வீட்டுக்கு வந்தால் அவருடைய அராஜகம் அதிகரித்து விடுமோ என்ற எண்ணத்தில் ஜனனி ஒரு பெரிய முடிவை எடுத்து இருக்கிறோம் என்று சொல்கிறார். அந்த வகையில் வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று நான்கு பெண்களும் முடிவெடுத்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.